இதுக்கு தானே காத்திருந்தோம்.. OnePlus-ன் புது Turbo போன்.. 9000mAh பேட்டரி, 80W சார்ஜிங் 144Hz OLED டிஸ்பிளே!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஆனது 2026 ஜனவரி மாதத்தில் அதன் ஒன்பிளஸ் டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த சீரீஸில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) மற்றும் ஸ்னாப்டிராகன் 7-சீரீஸ் (Snapdragon 7-series) சிப் மூலம் இயக்கப்படும் இரண்டு மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (AndroidHeadlines) வழியாக, இவ்விரு ஸ்மார்ட்போன்களில் ஸ்னாப்டிராகன் 7-சீரீஸ் உடன் மாடலின் டிசைன் மற்றும் முக்கிய அம்சங்கள் லீக் செய்யப்பட்டுள்ளது. அது ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) மாடல் ஆகும். ப்ராடோ (Prado) என்கிற கோட் நேமை (Code Name) கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் பளபளப்பான பிளாஸ்டிக் பேக் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

ஆக இது இந்தியா போன்ற சந்தைகளில் மிகவும் "ஆக்கிரமிப்பு மிக்க" விலை நிர்ணயதை பெறுவதை குறிக்கிறது. ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு கலர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது: க்ரீனிஷ் ஆன ப்ளூ ஷேட் மற்றும் ஸ்டாஅடர்ட் ஆன பிளாக் பினிஷ்.
ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவிற்கு வெளியே இது ஒன்பிளஸ் நோர்ட் பிராண்டிங்கின் கீழ் வர வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 80W பாஸ்ட் சார்ஜிங் உடனான ஒரு பெரிய 9,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்றும், இது சகிப்புத்தன்மையின் அடிப்படையில் வழக்கமான நடுத்தர அளவிலான ஸ்மார்ட்போன்களை விட சிறப்பாக நிலைநிறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போன் தனித்து நிற்கும் மற்றொரு பகுதி - அதன் டிஸ்பிளே ஆகும். இது 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.8-இன்ச் பிளாட் OLED டிஸ்பிளேவை பெறலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்
இந்த சிப்செட் 8ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம். ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 உடன் வரலாம். கேமராக்களை பொறுத்தவரை ரியர் கேமரா செட்டப்பில் 50-மெகாபிக்சல்ப்ரைமரி சென்சார், 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பீ கேமராவை பேக் செய்யலாம்.
ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன் ஸ்மார்ட்போன்: சமீபத்தில் எக்ஸ் (X) தளம் வழியாக, டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட சமீபத்திய பதிவின்படி, ஒன்பிளஸ் நிறுவனமானது இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதற்கு 'வோக்ஸ்வாகன்' என்ற குறியீட்டு பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இது ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும், இந்த ஸ்மார்ட்போன் 1.5கே ரெசல்யூஷன் உடனான 6.xx-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார். இது 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் உள்ளதை போலவே!
கேமராக்களை பொறுத்தவரை "கூறப்படும்" ஒன்பிளஸ் வோக்ஸ்வேகன் ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 9000mAh என்கிற மிகப்பெரிய பேட்டரி கெப்பாசிட்டியை கொண்டிருக்கும் என்றும்எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லை.
இதுபோன்ற ஒரு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக ஒன்பிளஸ் 15டி / ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15T / OnePlus 15s) மற்றும் அதே ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் உடனான ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) ஆகிய மாடல்கள் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.


Click it and Unblock the Notifications








