Home
Mobile

கடப்பாரையை இறக்கிய OnePlus கம்பெனி.. 8000mAh பேட்டரி உடன் புது போன்.. இந்திய அறிமுகம் கன்ஃபார்ம்!

யாராச்சும் இவனை நிறுத்துங்களேன் - என்று கூறும் அளவிற்கு ஒன்பிளஸ் நிறுவனமானது புயல் வேகத்தில்.. அடுக்கடுக்காக புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. நேற்று ஒன்பிளஸ் 15 மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 6 (ஒன்பிளஸ் 15ஆர்) ஸ்மார்ட்போன்களை சீனாவில் அறிமுகம் செய்தது.

இவ்விரு மாடல்களும் அடுத்த மாதம் (அதாவது 2025 நவம்பர் மாத இறுதிக்குள்) இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில்.. இதோடு சேர்ந்து (அதாவது தனியாக) மூன்றாவதாக இன்னொரு "முரட்டு" ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கடப்பாரையை இறக்கிய OnePlus கம்பெனி.. 8000mAh பேட்டரி உடன் புது போன்!

அது ஒன்பிளஸ் டர்போ (OnePlus Turbo) ஸ்மார்ட்போனாகும். இம்மாத தொடக்கத்தில் இருந்தே "ஒன்பிளஸ் நிறுவனம் 8000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதாக" பல லீக்ஸ் (Leaks) வெளியாகின. தற்போது அந்த லீக்ஸ் எல்லாம் உண்மையாகி உள்ளன. ஏனென்றால் ஒன்பிளஸ் டர்போவின் முக்கிய அம்சங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன; கூடவே இந்திய அறிமுகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்?
- 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 165ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7-இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 5 ஜென் சிப்செட் (Snapdragon 8 Gen 5 SoC)
- 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 8MP அல்ட்ராவைட் கேமரா

- எக்ஸ்-ஆக்சிஸ லீனியர் வைப்ரேஷன் மோட்டார் (X-axis linear vibration motor)
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ்
- என்எப்சி (NFC) ஆதரவு
- அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- 100W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 8000mAh பேட்டரி

ஒன்பிளஸ் டர்போ எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் போது, ஒன்பிளஸ் டர்போ ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் தீவிரமாக சோதிக்கப்பட்டு வருகிறது. இது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். அதாவது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் (டிசம்பர் மாதத்திற்குள்) வரலாம்.

சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கும், 16ஜிபி ரேம் + 256ஜிபி, 12ஜிபி ரேம் + 512ஜிபி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன்கள் முறையே (சுமார்) ரூ.53,000, ரூ.57,000 மற்றும் ரூ.61,000 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட டாப்-எண்ட் ஒன்பிளஸ் 15 மாடலின் விலை இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.67,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் ஆனது அப்சல்யூட் பிளாக், மிஸ்டி பர்பிள் மற்றும் சாண்ட் டியூன் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் சீனாவில் வாங்க கிடைக்கிறது

சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6 (ஒன்பிளஸ் 15ஆர்) ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: சீனாவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடனான ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.32,300 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல 16ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் தோராயமாக ரூ.36,000 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் தோராயமாக ரூ.38,800 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் தோராயமாக ரூ.42,200 க்கும், 16ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் தோராயமாக ரூ.48,400 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் ஏஸ் 6 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி முதல் குவிக் சில்வர் (Quicksilver), பிளாஷ் ஒயிட் (Flash White) மற்றும் பிளாக் (Black) ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வரும். முன்னரே குறிப்பிட்டபடி இந்தியாவில் இதே ஸ்மார்ட்போன் - ஒன்பிளஸ் 5 சீரீஸின் கீழ் - ஒன்பிளஸ் 15ஆர் மாடல் ஆக அறிமுகமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Turbo With 8000mAh Battery actively tested in India Will Launch within 2 months Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X