இதுக்கு தானே தவம் கிடந்தோம்.. 9000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. புது OnePlus டர்போ V.. 144Hz AMOLED டிஸ்பிளே!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீன மார்கெட்டில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகமாக தயாராக உள்ளன. இதற்கு அடுத்து வெளியாக உள்ள குளோபல் மாடலில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன மார்கெட்டில் வருகிற 2026 ஜனவரி மாதத்தில் டர்போ சீரிஸ் வெளியாக உள்ளதை அந்த நிறுவனமே உறுதி செய்துள்ளது. ஆனால், பேட்டரி, சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை வெளியிடவில்லை. இதற்கிடையில் 2026 மார்ச் மாதத்தில் குளோபல் வெர்ஷனாக ஒன்பிளஸ் டர்போ வி (OnePlus Turbo V) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன வெர்ஷனை விட இந்த ஒன்பிளஸ் டர்போ வி குளோபல் வெர்ஷன் மீதே இந்திய மார்கெட்டில் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால், இந்த வெர்ஷனே இங்கு வெளியாகும். அதேபோல ஒன்பிளஸ் நோர்ட் சிஇ (OnePlus Nord CE) மாடலாக வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த குளோபல் வெர்ஷனில் முழு பீச்சர்களும் ஆண்ட்ராய்டு ஹெட்லைன்ஸ் (AndroidHeadlines) வழியாக லீக்காகி உள்ளன.
சீன வெர்ஷனில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே கிடைக்க உள்ளது. ஆனால், குளோபல் வெர்ஷனில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க உள்ளது. அதேபோல ஃபாஸ்ட் சார்ஜிங்கிலும் சீன வெர்ஷனில் கூடுதல் வாட்ஸ் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6டி மாடலுக்கும், இந்தியாவில் வெளியான ஒன்பிளஸ் 15ஆர் மாடலுக்கும் பேட்டரி வித்தியாசம் இருந்தது.
ஒன்பிளஸ் டர்போ வி அம்சங்கள் (OnePlus Turbo V Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட்டுடன் இந்த ஒன்பிளஸ் டர்போ வி வெளியாக உள்ளது. இதில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) உள்ளது.
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்களில் வெளியாக உள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு கொண்டுள்ளது. 6.8 இன்ச் (2800 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளேவை கொடுக்க உள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்க இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி இந்த ஒன்பிளஸ் டர்போ வி போனில் கிடைக்கிறது. மேலும், 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்க உள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்கு 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor) கொண்டுள்ளது.
மேலும், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கிடைக்க உள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் கொடுக்கும்படி 9000mAh பேட்டரி கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) கனெக்டிவிட்டி ஆதரவுகள் கிடைக்கின்றன.
ப்ளூ (Blue) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ மாடலாக எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் வெர்ஷன் 2026 மார்ச் மாதத்தில் வெளியாக உள்ளது. ஆகவே, இந்தியாவில் அதற்கு அடுத்த ஓரிரு மாதங்களில் எதிர்பார்க்கலாம். சீனாவில் ஜனவரி மாதத்தில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications








