வாங்குனா இப்படிவொன்னு வாங்னும்.. 10000mAh பேட்டரி.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. புது OnePlus.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் டர்போ 7 (OnePlus Turbo 7) ஸ்மார்ட்போனின் வெளியீட்டுக்கு ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், கேமிங் பிரியர்களும் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர். ஏனென்றால், 10000mAh பேட்டரி கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் டர்போ 7 வெளியாக இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்களுடன் வெளியீட்டு விவரங்களும் மார்கெட்டில் கசிந்துள்ளன.
சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஸ்மார்ட்போனானது, கடந்த ஜனவரி மாதம் வெளியாகியது. கேமிங் பிரியர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றதால், மற்ற மார்கெட்களிலும் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 6 (OnePlus Nord 6) மாடலாக ரீபிராண்ட் செய்யப்பட்டு இந்த ஒன்பிளஸ் டர்போ 6 வெளியாகியது.

இதனால், ஒன்பிளஸ் டர்போ 7 ஸ்மார்ட்போனானது, இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 7 (OnePlus Nord 7) மாடலாக வெளியாகும் என்பதால், சீன வெளியீட்டின் மீது ஒட்டுமொத்த கவனமும் இருக்கிறது. ஆனால், வழக்கம்போல அடுத்தாண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது டிசம்பர் மாதத்திலேயே வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவின் ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான ஸ்மார்ட் பிகாச்சு (Smart Pikachu) ஆனது ஒன்பிளஸ் டர்போ 7 ஸ்மார்ட்போனானது, இந்தாண்டு டிசம்பர் மாதத்திலேயே வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால், அடுத்த ஓரிரு மாதங்களில் இந்திய மற்றும் குளோபல் மார்கெட்களில் எதிர்பார்க்கலாம். அதோடு முக்கிய பீச்சர்களும் கசிந்துள்ளன. இதை முதலில் பார்ப்போம்.
ஒன்பிளஸ் டர்போ 7 அம்சங்கள் (OnePlus Turbo 7 Specifications): 1.5K ரெசொலூஷன் கொண்ட பிளாட் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் டர்போ 7 ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 6 (Octa Core Snapdragon 8 Gen 6) சிப்செட் கிடைக்க இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 10000mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது.
200 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. முன்னதாக வெளியான ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போனின் பீச்சர்களை பார்க்கையில், 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 1.5K ரெசொலூஷன், 165Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் புரொடெக்சன் கிடைக்கிறது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. ஆகவே, டர்போ 7 மாடலில் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் எதிர்பார்க்கலாம். 50 எம்பி மெயின் கேமரா உள்ளது.
மேலும், 2 எம்பி மோனோகுரோம் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன், 4K ரெக்கார்டிங் கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 9000mAh பேட்டரி கிடைக்கிறது. சீனாவில் ரூ.30,000 பட்ஜெட்டில் வெளியாகியது. ஆகவே, ஒன்பிளஸ் டர்போ 7 மாடலானது ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாகலாம். இந்தியாவில் கூடுதலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
