அட இது நம்ம List-லயே இல்லீயே.. 6X, 6X Pro.. பிக் பேட்டரி உடன் இரண்டு புது OnePlus போன்கள்!
இந்தியாவில் உள்ள ஒன்பிளஸ் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும், ஒன்பிளஸ் 15எஸ் அறிமுகம் மற்றும் ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் லீக்டு அம்சங்கள் மீது -ஒரு கண் அல்ல, இரண்டு கண்களையும் வைத்து இருக்கும் சூழ்நிலையில், சர்ப்ரைஸ் ஆக இன்னொரு சூப்பர் அப்டேட் கிடைத்துள்ளது.
என்ன அப்டேட்? ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் என்கிற சீரிஸின் (OnePlus Turbo 6X Series) கீழ் இரண்டு வெவ்வேறு டிஸ்பிளே ஆப்ஷன்களுடன் (Two different display options) புதிய ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

நம்பகமான சைனீஸ் டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனிடமிருந்து இந்த தகவல் வருகிறது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடல் ஆனது 144ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். அதே நேரத்தில், ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ மாடல் ஆனது 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
ஆனால் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் எந்த அம்சங்களையும் வெளியிடவில்லை. வெறுமனே டிஸ்பிளே வேறுபாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் சாதாரண மாடல் மிகவும் மலிவு விலை ஆப்ஷனாக இருக்கலாம் என்றும், ப்ரோ வேரியன்ட் ஆனது பிரீமியம் பிரிவை இலக்காக கொண்டிருக்கும் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது
ஒன்பிளஸ் நிறுவனம் இதற்கு முன்பு டர்போ சீரிஸில் எக்ஸ் என்கிற பெயர் கொண்ட மாடல்களை அறிமுகப்படுத்தியதில்லை, எனவே இந்த புதிய சீரீஸ், எந்த விலைப்பிரிவை இலக்காக கொண்டுள்ளது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இது ஒரு ஃபிளாக்ஷிப் சீரிஸாக இருக்க வாய்ப்பில்லை, ஏனென்றால் ஸ்டாண்டர்ட் மாடலில் உள்ள எல்சிடி டிஸ்பிளேவை கருத்தில் கொள்ளும்போது, நிச்சயம் இதுவொரு பிளாக்ஷிப் சீரீஸ் ஆக இருக்க வாய்ப்பிலை
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது இந்த டர்போ 6எக்ஸ் சீரீஸ் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இந்த புதிய போன்களுக்கான அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அல்லது விலை விவரங்கள் எதுவும் இல்லை. மேலும் இந்தியாவிற்கு இந்த ஸ்மார்ட்போன்கள் நோர்ட் சீரிஸின் கீழ் வருமா என்பதிலும் எந்த உறுதிப்பாடும் இல்லை. இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரியில் ஒன்பிளஸ் டர்போ 6 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து டர்போ எக்ஸ்6 சீரீஸ் குறித்த லீக் வெளிவந்துள்ளதால், இவ்விரு மாடல்களும் விரைவில் அறிமுகம் செய்யப்பட நல்ல வாய்ப்புகள் உள்ளன.
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் டர்போ 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன அம்சங்களைக் கொண்டுள்ளன? குறிப்பாக சொல்லப்போனால், ஒன்பிளஸ் டர்போ 6 அதன் விலைப்பிரிவுக்கு ஏற்ற பல உயர்தர அம்சங்களை கொண்டுள்ளது. இந்த போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 பிராசஸரை கொண்டுள்ளது மற்றும் கேமிங்கிற்காக வடிவமைக்கப்பட்ட 1.5கே 165ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
மேலும் இது ஒரு பெரிய 9,000mAh கிளேசியர் பேட்டரியையும், 80W சூப்பர்VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவையும்கொண்டுள்ளது. இதே சீரிஸின் கீழ், ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்டுடன் வரும் ஒன்பிளஸ் டர்போ 6வி மாடலும் அறிமுகமானது. மேலும் இந்த ஸ்மார்போன் 144ஹெர்ட்ஸ் ஐ ப்ரொடெக்ஷன் கேமிங் டிஸ்பிளே மற்றும் மற்றொரு பெரிய 9,000mAh பேட்டரியையும் கொண்டுள்ளது.
தற்போதுள்ள சீரீஸை அடிப்படையாக கொண்டு, ஒன்பிளஸ் நிறுவனம் வரவிருக்கும் டர்போ 6எக்ஸ் சீரிஸிலும் பெரிய பேட்டரிகள் மற்றும் அதிக ரெஃப்ரெஷ் ரேட் டிஸ்பிளேக்களில் தொடர்ந்து கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கி வருவதால், இந்த போன்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications