Home
Mobile

அறிமுகமானது புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 50MP கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் (OnePlus Turbo 6X) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். இப்போது ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் அம்சங்கள் (OnePlus Turbo 6X Specifications): 6.78-இன்ச் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த டிஸ்பிளேவில் 2400 x 1080 பிக்சல்ஸ்,144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate), 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

அறிமுகமானது புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

மீடியாடெக் டைமன்சிட்டி 7360 சூப்பர் சிப்செட் ( Dimensity 7360 Super chipset) உடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி Monochrome வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போன். அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் மூலம் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) வசதியுடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதியும் இந்த போனில் உள்ளது.

7000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

அறிமுகமானது புதிய ஒன்பிளஸ் 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

5ஜி, வைஃபை 5, என்எப்சி, புளூடூத் வி5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளன. ஒயிட், கிரீன், பிளாக் நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடலின் விலை 1899 yuan (இந்திய மதிப்பில் ரூ.26,170)-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடலின் விலை 1999 yuan (இந்திய மதிப்பில் ரூ.28,120)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடலின் விலை 2299 yuan (இந்திய மதிப்பில் ரூ.32,340)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Turbo 6X with 7000mAh battery launched in China: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X