ரூ.15000 க்கு 8000mAh பேட்டரி, IP69X உடன் புது OnePlus போன்.. மார்க்கெட்டை காலி செய்ய போகும் 6X Pro மாடல்!
கடந்த வாரம் ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் என்கிற புதிய சீரிஸின் (OnePlus Turbo 6X Series) கீழ் இரண்டு வெவ்வேறு டிஸ்பிளே ஆப்ஷன்களுடன் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடல் ஆனது 144ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும். அதே நேரத்தில், ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ (OnePlus Turbo 6X Pro) மாடல் ஆனது 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

இவ்விரு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தைக்கு, எந்த மாடல் பெயரின் கீழ் ரீபிராண்டிங் செய்யப்படும் என்று - அதாவது ஒன்பிளஸ் நார்ட் சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுமா என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. ஆனாலும் பட்ஜெட் விலை ஒன்பிளஸ் மாடல்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் நல்ல எ = வரவேற்பு உள்ளதால், இவைகள் இங்கும் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையில் அதே டிப்ஸ்டர் வழியாக வரவிருக்கும் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ மாடல் குறித்த புதிய விவரங்கள் கிடைத்துள்ளது. இம்முறை, குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் ஆனது வெளியீட்டிற்கு முன்பாகவே தன்னிடம் கிடைத்ததாகவும், அவர் அதை நேரடியாக பயன்படுத்தியதாகவும் கூறுகிறார். கூடவே ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோவின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயத்தையும் வெளிப்படுத்தி உள்ளார்.
அதன்படி, ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய சாம்சங் 1.5கே பிளாட் டிஸ்பிளே இடம்பெறும். முன்னதாக வெளியாக தகவல், இந்த ஸ்மார்ட்போனில் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளே இடம்பெறும் என்று தெரிவித்திருந்தது. ஆனால் லேட்டஸ்ட் லீக் ஆனது, இது ஒரு எல்டிபிஸ் சாம்சங் பேனல் உடன் வருவதை சுட்டிக்காட்டுகிறது. இந்த டிஸ்பிளேவில் ஐ ப்ரொடெக்ஷன் தொழில்நுட்பமும் இருக்கும்.
மேலும், ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோவில் 8000mAh பேட்டரி இடம்பெறக்கூடும். இது போதுமான அளவு பெரியதாக இருந்தாலும், ஒன்பிளஸ் டர்போ 6 மற்றும் டர்போ 6vவி மாடல்களை விட இதன் கொள்ளளவு 1000mAh குறைவாகும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் IP69X நீர் எதிர்ப்பு சான்றிதழையும் பெற்றிருக்க வாய்ப்புள்ளது.
ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் சீரிஸ் விலை விவரங்கள்: இந்த புதிய ஒன்பிளஸ் சீரீஸின் உண்மையான ஆச்சரியம் - அதன் விலையாக இருக்கலாம். ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, சீனாவில் 1,000 யுவான் விலைப்பிரிவின் கீழ் அறிமுகமாகும் என்று என்று கூறப்படுகிறது. அதாவது இதன் விலை, இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.15000 க்கும் குறைவாக இருக்கலாம்
இந்த விலைக்கு, 144ஹெர்ட்ஸ் சாம்சங் டிஸ்பிளே, 8,000mAh பேட்டரி மற்றும் IP69X பாதுகாப்பு ஆகியவற்றின் கலவையானது மிகவும் சிறப்பான அம்சங்கள் ஆகும். ப்ரோ மாடலின் விலையே இவ்வளவு குறைவாக இருந்தால், ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடலின் விலை இன்னும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடலில் எல்சிடி டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டை எதிர்பார்க்கலாம்.
சரி ஒன்பிளஸ் 16 (OnePlus 16) எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? அறிமுகத்தை பொறுத்தவரை சீனாவில் இது 2026 அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். அதை தொடர்ந்து 2026 நவம்பர் மாதம் இந்தியா உட்பட மற்ற உலகளவிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம்
சைனீஸ் டிப்ஸ்டர் ஆன ஸ்மார்ட் பிகாச்சு வழியாக வெளியான புதிய லீக்கின்படி, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனில் 200எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இடம்பெறக்கூடும். இதன் சென்சார், சாம்சங்கின் எச்பி5 ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எச்பி5 சென்சார் ஆனது ரியல்மி ஜிடி 8 ப்ரோ போன்ற போன்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
200எம்பி போன்ற அதிக ரெசல்யூஷன் கொண்ட பெரிஸ்கோப் சென்சாருக்கு மாறுவது, அத்தகைய சூழல்களில் - துல்லியத்தையும் நிலைத்தன்மையையும் மேம்படுத்த அதிக வாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். டெலிஃபோட்டோவுடன் சேர்த்து, ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் ப்ரைமரி மற்றும் அல்ட்ராவைடு கேமராக்களுக்கு இரண்டு 50எம்பி சென்சார்கள் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இது அதிக ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 1.5கே டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில அறிக்கைகள், ஒன்பிளஸ் 16 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே 200ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை அடையக்கூடும் என்று கூறுகின்றன, இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன், 2என்எம் செயல்முறையில் உருவாக்கப்பட்ட குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ சிப்செட்டில், LPDDR6 ரேம் உடன் இணைந்து இயங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த காம்பினேஷன் - செயல்திறன் மற்றும் ஆற்றல் சேமிப்பில் நல்ல மேம்பாடுகளை குறிக்கிறது. மேலும் இதில் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார், ண்ட்ராய்டு 17 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 17 ஆகிய அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications