Home
Mobile

ஜூன் 10-ல் களமிறங்கும் புதிய OnePlus 5ஜி போன்.. 8000mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ (OnePlus Turbo 6X Pro) ஸ்மார்ட்போனை வரும் ஜூன் 10-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ அம்சங்கள் (OnePlus Turbo 6X Pro Specifications): 6.72-இன்ச் Samsung AMOLED டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். அதுவும் இந்த டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஜூன் 10-ல் களமிறங்கும் புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சூப்பர் சிப்செட்( Dimensity 7400 Super chipset)உடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன். அதுவும் இந்த ஸ்மார்ட்போனின் மூலம் துல்லியமான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

ஜூன் 10-ல் களமிறங்கும் புதிய OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

8000mAh பேட்டரி உடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆகவே இந்த போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Turbo 6X Pro China Launch Date Announced: check All details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X