பக்கா மாஸ்.. 7000mAh பேட்டரி உடன் 6X.. 8000mAh பேட்டரி உடன் 6X Pro.. 2 புது OnePlus 5ஜி போன்.. எப்போ Launch?
ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் (OnePlus Turbo 6X) என்கிற மாடல் பெயரின் கீழ் பெர்பார்மென்ஸை மையமாக கொண்ட ஒரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டு வருவதாக வதந்திகள் வெளியான சில நாட்களிலேயே.. ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்துள்ளது
இதுவரை ஒன்பிளஸ் டர்போ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது இல்லை என்றாலும், சீனாவில் அறிமுகமாகும் இதுபோன்ற மாடல்கள் இந்திய சந்தையில் நார்ட் சீரீஸின் கீழ் ரீபிராண்டிங் செய்யப்படும் வழக்கம் உள்ளதால், ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மீது நாம் ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை.

அறிமுக தேதி உறுதியான வேகத்தில் முக்கிய அம்சங்கள் லீக்: சீன சமூக ஊடகத்தளமான வெய்போவில் ஒரு பயனர் கருத்துக்கு பதிலளிக்கும்போது, ஒன்பிளஸ் சீனாவின் தலைவர் ஆன லி ஜியே, டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போனின் லாஞ்சு டைம்லைனை வெளிப்படுத்தினார். அவர் ஜூன் 18 ஆம் தேதிக்கு முன்னர் இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் மாடலுடன் சேர்ந்து ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ மாடலும் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் படியாக, டர்போ 6எக்ஸ் ப்ரோ மற்றும் டர்போ 6எக்ஸ் ஆகிய 2 மாடல்களின் முக்கிய அம்சங்களும் - டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (Abhishek Yadav @yabhishekhd) வழியாக - லீக் ஆகியுள்ளது.
ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் என்ன்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144ஹெர்ட்ஸ் 1.5கே சாம்சங் அமோ எல்இடி டிஸ்பிளே
- டைமென்சிட்டி 7400 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 16
- 50MP ப்ரைமரி + 8MP ரியர் கேமரா
- 16MP செல்பீ கேமரா
- 8000mAh பேட்டரி
- ஆப்டிகல் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- IP68/IP69/IP69K ரேட்டிங்
- 8.8மிமீ தடிமன்
- 213 கிராம் எடை
ஒன்பிளஸ் டர்போ 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்ன்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144ஹெர்ட்ஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
- டைமென்சிட்டி 7360 சிப்செட்
- ஆண்ட்ராய்டு 16
- 50MP ப்ரைமரி + 2MP ரியர் கேமரா
- 8MP செல்பீ கேமரா
- 7000mAh பேட்டரி
- 45W வயர்டு சாஜிங்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- IP64 ரேட்டிங்
- 8.55மிமீ தடிமன்
- 208 கிராம் எடை
ஒன்பிளஸ் தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, இந்நிறுவனம், அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில், ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல் (OnePlus Community Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இன்று (ஜூன்.4) ஆம் தேதி முதல் தொடங்கி, வருகிற ஜூன் 10 ஆம் தேதி வரை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இந்தியா பேனரின்படி - என்னென்ன ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் என்ன ஆரம்ப விலைக்கு வாங்க கிடைக்கும்?
1.ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 5ஜி (OnePlus Nord CE6 5G) - ரூ.29,999
2. ஒன்பிளஸ் நார்ட் சிஇ6 லைட் 5ஜி (OnePlus Nord CE6 Lite 5G) - ரூ.21,499
3. ஒன்பிளஸ் 15ஆர் 5ஜி (OnePlus 15R 5G) - ரூ.51,999
4. ஒன்பிளஸ் 15 (OnePlus 15) - ரூ.74,999
5. ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) - ரூ.49,999
6. ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) - ரூ.39,999
7. ஒன்பிளஸ் 13 (OnePlus 13) - ரூ.52,999
8. ஒன்பிளஸ் நார்ட் 6 5ஜி (OnePlus Nord 6 5G) - ரூ .40,999


Click it and Unblock the Notifications