OnePlus போட்டான் பாருங்க.. 9000mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
9000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், பட்டையை கிளப்பும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படியான ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்செட்டுடன் ஒன்பிளஸ் டர்போ 6விஎஸ் (OnePlus Turbo 6Vs) ஸ்மார்ட்போன் சத்தமே இல்லாமல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) ஸ்மார்ட்போன் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதற்கு அடுத்த ஒன்பிளஸ் டர்போ 7 (OnePlus Turbo 7) மற்றும் ஒன்பிளஸ் டர்போ 7வி (OnePlus Turbo 7V) போன்ற மாடல்களே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டர்போ 6 சீரிஸ் மாடல்களிலே இந்த ஒன்பிளஸ் டர்போ 6விஎஸ் வெளியாகி இருக்கிறது.

இது சத்தமே இல்லாமல், லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது. சீன மார்கெட்டில் விற்பனைக்கும் வந்துவிட்டது. இந்த ஒன்பிளஸ் டர்போ 6விஎஸ் ஸ்மார்ட்போன் பீச்சர்கள் ஒன்பிளஸ் டர்போ 6வி மாடலை போலவே இருக்கிறது. ஆனால், புதிய கலரில் வெளியாகி இருக்கிறது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்களுக்கு கூடுதல் கலர் ஆப்ஷன்கள் கிடைக்கும். முதலில் பீச்சர்களை பார்க்கலாம்.
ஒன்பிளஸ் டர்போ 6விஎஸ் அம்சங்கள் (OnePlus Turbo 6Vs Specifications): 6.78 (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்து இருக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. PWM டிம்மிங் மற்றும் டிசி டிம்மிங் டிஸ்பிளே மாடலாக இந்த ஒன்பிளஸ் டர்போ 6விஎஸ் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப 9000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பேட்டரிக்கு 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த ஒன்பிளஸ் டர்போ 6விஎஸ் கிடைக்கிறது. பேட்டரியுடன் 8.5 எம்எம் தடிமன் வருகிறது. மொத்தமாக 215 கிராம் எடை உள்ளது.
கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கொண்ட மாடலாக விற்பனைக்கு கிடைக்கிறது. பிரீமியம் குவாலிட்டியை கொடுக்கிறது. ஏனென்றால், IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் மற்றும் IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொண்ட மாடலாக இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரியை கொடுத்து இருக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி மோனோ சென்சார் கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), எக்ஸ்-ஆக்சிஸ் மோட்டார் (X-axis Motor) மற்றும் ஐஆர் பிளாஸ்டர் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை 3,699 யுவானாக இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.52,851 ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் விற்பனைக்கு லிஸ்ட் செய்யப்பட்டு இருக்கிறது. ஆரஞ்ச் (Orange) மற்றும் நோவா ஒயிட் (Nova White) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. மற்ற மார்கெட்களில் வெளியாகுமா என்பது விரைவில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications
