Home
Mobile

OnePlus செம்ம போடு.. 9000mAh பேட்டரி.. 165Hz OLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. 80W சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடல்களான ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) ஸ்மார்ட்போன்களின் பேட்டரி கேபாசிட்டி உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே, வெளியான ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போனை தூக்கி சாப்பிடும்படி இந்த பேட்டரி கேபாசிட்டி இருக்கிறது. இந்த டர்போ மாடல்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சீன மார்கெட்டில் 8300mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் ஏஸ் 6டி (OnePlus Ace 6T) ஸ்மார்ட்போனே இதுவரையில் வெளியான ஒன்பிளஸ் போன்களில் அதிக பேட்டரி கேபாசிட்டியை கொடுத்தது. ஆனால், டர்போ சீரிஸ் மாடல்களில் இதுவரை கொடுக்கப்படாத வகையில் பெரிய பேட்டரி கிடைக்கும் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்தது.

OnePlus செம்ம போடு.. 9000mAh பேட்டரி.. 165Hz OLED டிஸ்பிளே.. மாடல்?

மேலும், ஜனவரி மாதத்தில் இந்த ஒன்பிளஸ் டர்போ மாடல்கள் சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவித்தது. அதேபோல ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) ஆகிய மாடல்கள் வருகிற ஜனவரி 8 ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாகும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி செய்துவிட்டது. இப்போது, பேட்டரி உறுதியாகி இருக்கிறது.

ஆகவே, ஒன்பிளஸ் டர்போ 6 மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி மாடல்களில் 9000mAh பேட்டரி கிடைக்கின்றன. சிங்கிள் சார்ஜில் 10 மணி நேரங்களுக்கும் மேலாக ஹெவி யூசேஸ் பேக்கப் கொடுக்கும்படி இந்த மாடல்கள் கிடைக்க உள்ளன. மேலும், டிஸ்பிளே, சிப்செட், ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டிசைன் உள்ளிட்ட விவரங்களும் கிட்டத்தட்ட தெரிவந்துள்ளன.

ஒன்பிளஸ் டர்போ 6 அம்சங்கள் (OnePlus Turbo 6 Specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் டர்போ 6 கிடைக்க உள்ளது. அட்ரினோ 835 ஜிபியு (Adreno 825 GPU) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (OxygenOS 16) கிடைக்க உள்ளது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க உள்ளது.

மேலும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்கிறது. 165Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 9000mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்க உள்ளது. மேலும், 27W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் கிடைக்க இருக்கிறது. IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது.

மேலும், IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்க இருக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. பிளாட் டிஸ்பிளே டிசைனில் லோன் பிளாக் (Lone Black), சில்வர் (Silver) மற்றும் வைல்டர்னஸ் கிரீன் (Wilderness Green) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. டர்போ 6வி ஸ்மார்ட்போனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் டர்போ 6வி அம்சங்கள் (OnePlus Turbo 6V Specifications): ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க உள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1.5K ரெசொலூஷன் ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது. 9000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. லோன் பிளாக் (Lone Black), ஃபியர்லெஸ் ப்ளூ (Fearless Blue) நோவா ஒயிட் (Nova White) கலர்கள் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Turbo 6 OnePlus Turbo 6V With 9000mAh Battery Confirmed Ahead of Launch in China on Jan 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X