Home
Mobile

OnePlus ஒரே போடு.. 9000mAh பேட்டரி.. 3 OS அப்கிரேட்.. 165 Hz OLED டிஸ்பிளே.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பெரிய பேட்டரி கொண்ட மாடல்களாக ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி (OnePlus Turbo 6V) மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த மாடல்களில் ஓஎஸ் அப்கிரேட் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. இந்த ஒன்பிளஸ் டர்போ 6 சீரிஸ் மாடல்களின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் வருகிற ஜனவரி 8 ஆம் தேதி இந்த மாடல்கள் வெளியாக உள்ளன. இதுவரையில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் மாடல்களிலேயே பெரிய பேட்டரியை கொண்ட ஸ்மார்ட்போன்களாக இவை இருக்கின்றன. 9000mAh பேட்டரி கிடைக்க உள்ளது. இந்த பேட்டரி உள்பட முக்கிய பீச்சர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இப்போது ஓஎஸ் பாலிசி உறுதியாகி இருக்கிறது.

OnePlus ஒரே போடு.. 9000mAh பேட்டரி.. 3 OS அப்கிரேட்.. 165 Hz மாடல்!

3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களை இந்த ஒன்பிளஸ் டர்போ 6 மற்றும் ஒன்பிளஸ் டர்போ 6வி ஸ்மார்ட்போன்கள் கொடுக்க இருக்கின்றன. கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்டுள்ளது. இப்போது, ஒன்பிளஸ் கிளப் வழியாக கசிந்த முழு பீச்சர்களை பார்த்துவிடலாம்.

ஒன்பிளஸ் டர்போ 6 அம்சங்கள் (OnePlus Turbo 6 Specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 (Snapdragon 8s Gen 4) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் டர்போ 6 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், கலர்ஓஎஸ் 16 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்டுள்ளது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 165 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளேவை இந்த டர்போ 6 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது

ஆப்டிகல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Optical In-display Fingerprint Sensor) கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுத்துள்ளது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. மேலும், 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9000mAh பேட்டரி கொடுத்துள்ளது.

IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் & IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொண்டுள்ளது. ஒயிட் (White), பிளாக் (Black) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க உள்ளது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக உள்ளது.

ஒன்பிளஸ் டர்போ 6வி அம்சங்கள் (OnePlus Turbo 6V Specifications): ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 (Snapdragon 7s Gen 4) சிப்செட்டை இந்த ஒன்பிளஸ் டர்போ 6வி ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. முந்தைய மாடலை போலவே கலர்ஓஎஸ் 16 மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க உள்ளது. 6.8 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், 1.5K ரெசொலூஷன் கொடுக்கிறது.

144 Hz ரெஃப்ரெஷ் கிடைக்கிறது. 9000mAh பேட்டரி இந்த ஒன்பிளஸ் டர்போ 6வி ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. மேலும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி சார்ஜிங் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொடுத்துள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா வருகிறது. ஆப்டிகல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Turbo 6 OnePlus Turbo 6V 3 OS Upgrades 4 Years Security Updates Confirmed Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X