Home
Mobile

கெட்ட சகுனம் பார்க்கும் OnePlus நிறுவனம்.. முக்கிய மாடலின் அறிமுகம் புறக்கணிப்பு.. அதற்கு பதிலாக?

பெரும்பாலான சீன நிறுவனங்கள் "4" என்கிற எண்ணை தவிர்ப்பதை அடிக்கடி காண முடியும். ஏனென்றால் பல ஆசிய கலாச்சாரங்களில் 4 என்கிற எண் எதிர்மறையான சகுனமாக கருதப்படுகிறது. இந்த நம்பிக்கையை பின்பற்றி ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் ஏஸ் 4 (OnePlus Ace 4) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 4 ப்ரோ (OnePlus Ace 4 Pro) ஸ்மார்ட்போன்களை அப்படியே தவிர்த்துவிட்டு ஒன்பிளஸ் ஏஸ் 5 (OnePlus Ace 5) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ப்ரோ (OnePlus Ace 5 Pro) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 3 (OnePlus Ace 3) என்கிற பெயரில் சீனாவில் அறிமுகமான ஸ்மார்ட்போன் தான் உலக சந்தைகளில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஆக அறிமுகம் செய்யப்பட்டது என்பதால், ஒன்பிளஸ் ஏஸ் 5 மாடலானது சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பதிலும்.. இந்தியர்கள் இந்த ஸ்மார்ட்போனை இப்போதே ஃபாலோ செய்வதிலும் எந்த தவறும் இல்லை!

கெட்ட சகுனம் பார்க்கும் OnePlus முக்கிய மாடலின் அறிமுகம் புறக்கணிப்பு

இது (ஒன்பிளஸ்1 3ஆர்) ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 Chipset) உடன் வரும் ஒன்பிளஸ் 13 (OnePlus 13) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்படும். இவ்விரு ஸ்மார்ட்போன்களும் 2024 அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் சீனாவில் அறிமுகமாகும் என்றும், அதனை தொடர்ந்து ஜனவரி 2025 இல் இந்தியா உட்பட உலக சந்தைகளில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 5 அல்லது ஒன்பிளஸ் 13ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸ் ஆனது ஏஸ் 3 சீரீஸில் பின்பற்றப்பட்ட அதே உத்தியை கொண்டிருக்கும். அதாவது அல்ட்ரா-லார்ஜ் சிலிக்கான் பேட்டரியுடன் இணைந்த பிளாக்ஷிப் சிப்செட் இடம்பெறும். கூடுதலாக வடிவமைப்பிலும் பெரிய அளவிலான மாற்றங்களை கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரிஸின் இன்னொரு மாடல் ஆன ஒன்பிளஸ் ஏஸ் 5வி (​​OnePlus Ace 5V) பற்றி எந்த தகவலும் இல்லை, இது ஏஸ் 5 சீரிஸின் மிகவும் மலிவு விலை மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவுவூட்டும் வண்ணம், இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளில் ஒன்பிளஸ் ஏஸ் 3வி (OnePlus Ace 3V) ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) வெளியிடப்பட்டது. ஆக ஏஸ் 5வி மாடலானது இந்தியாவில் நோர்ட் 5 ஆக வர அதிக வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஓப்பன் ஓப்பன் (Open Open) ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷனை ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) என்று அழைக்கப்படும். இந்த ஸ்பெஷல் எடிஷனின் வழியாக ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது கிரிம்சன் ஷேடோ கலரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

"இந்த எடிஷன் ஒரு அப்டேட்டை விட அதிகம்" என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஹசல்பிளாட் 590சிடபுள்யூ 60 இயர்ஸ் விக்டர் ரெட் எடிஷனுக்கு (Hasselblad 503CW 60 Years Victor Red Edition) மரியாதை செலுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது வழக்கமான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்களை கொண்டிருக்கும் ஆனால் புதிய வடிவமைப்பை பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus To Skip Number 4 Launch Ace 5 May By End of 2024 Rebranded as OnePlus 13R in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X