கெட்டுப்போன கம்பெனி பெயரை காப்பாற்ற அடுத்தடுத்த நடவடிக்கை.. ரூ.18,000 பட்ஜெட்ல புது OnePlus போன்.. என்ன மாடல்?
உங்களில் பலரும், கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனின் மீது ரீஃபண்ட் அறிவிக்கப்பட்டுள்ளதை ஏற்கனவே அறிந்திருக்கலாம். யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் குழப்பம் காரணமாக ஒன்பிளஸ் 12ஆரின் 256ஜிபி ஆப்ஷனை வாங்கியவர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படுமென்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
யுஎப்எஸ் 3.1 ஸ்டோரேஜ் உடன் வரும் ஒன்பிளஸ் 12ஆர் மாடலை, யுஎப்எஸ் 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது என்று "பொய்யான" தகவலை சொன்ன காரணத்தினால் ஒன்பிளஸ் நிறுவனம் பல வகையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சிக்கலை "மறக்கடிக்க வைக்கும்" நோக்கத்தின்கீழ் ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ச்சியாக சில வேலைகளை செய்துவருகிறது.

ஒன்பிளஸ் 12ஆர் ஸ்மார்ட்போனிற்கு ரீஃபண்ட் அறிவித்த கையோடு, அதன் நோர்ட் சீரீஸின் கீழ் அறிமுகமான ஒரு ஸ்மார்ட்போனின் மீது திடீரென ரூ.2000 என்கிற நிரந்தர விலைக்குறைப்பை அறிவித்தது. அதை தொடர்ந்து ரூ.18000 பட்ஜெட்டில் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.
அதென்ன ஸ்மார்ட்போன்? எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? சரியாக என்ன விலைக்கு வரும்? மேலும்.. திடீர் விலைகுறைப்பை பெற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? அதன் பழைய விலை என்ன? புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸின் புதிய ஸ்மார்ட்போன்: பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தில் (Bureau of Indian Standards) ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் ஒன்று தரச்சான்றிதழை பெற்றுள்ளது. வடிவமைப்பை வைத்து பார்க்கும் போது, அது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) அல்லது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 லைட் (OnePlus Nord CE 5 Lite) ஆக இருக்கலாம் என்பது போல் தெரிகிறது.
வழக்கமாக பிஐஎஸ் தரச்சான்றிதழ் வலைத்தளத்தை கடந்த ஸ்மார்ட்போன்கள் எல்லாமே உடனடி அறிமுகத்தை (Imminent Launch) காணும் என்பதால், ஒன்பிளஸின் இந்த புதிய நோர்ட் சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆனது வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பதில் எந்த தவறும் இல்லை.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு பின்னர் நோர்ட் சிஇ 4 சீரீஸ் மாடல்கள் தானே வெளியாகும் என்கிற சந்தேகம் உங்களுக்குள் எழலாம். சீன கலாச்சாரத்தில் நான்கு என்கிற எண் ஒரு கெட்ட சகுனமாக கருதப்படுவதால் - பெரும்பாலான சீன நிறுவனங்களை போலவே - ஒன்பிளஸ் நிறுவனமும் நோர்ட் சிஇ 4 சீரீஸிற்கு பதிலாக நேரடியாக நோர்ட் சிஇ 5 சீரீஸை அறிமுகம் செய்யவுள்ளது.
என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? டிசைன் மற்றும் கேமராக்களை தவிரத்து, ஒன்பிளஸின் இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றி அதிகம் தெரியவில்லை. முன்பக்கவடிவமைப்பை பொறுத்தவரை, பிளாட் பிரேம் பாடி மற்றும் டிஸ்பிளேவில் பஞ்ச்-ஹோல் டிசைனை காண முடிகிறது. பேக் பேனலில் செங்குத்தாக வடிவமைக்கப்பட்ட டூயல் ரியர் கேமரா செட்டப்பைபார்க்கமுடிகிறது.
அம்சங்களை பொறுத்தவரை, இதன் ரியர் கேமரா செட்டப்பில் உள்ள இரண்டு கேமராக்களில் ஒன்று 50எம்பி சென்சார் ஆக இருக்கலாம். முன்பக்க கேமராவை பொறுத்தவரை, 16எம்பி செல்பீ கேமராவை பேக் செய்யலாம். முந்தைய அறிக்கைகளின்படி, நோர்ட் சிஇ 5 மற்றும் நோர்ட் சிஇ 5 லைட் ஆகியவைகள் முறையே ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 மற்றும் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்களால் இயக்கப்படலாம்.
இந்த ஃபோன்கள் Nord CE 3 வரிசைக்குப் பின் வரும் என்பதால், Nord CE 4 சீரிஸ் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது இது பெரும்பாலான சீன நிறுவனங்களைப் போலவே தோன்றுகிறது, சீன கலாச்சாரத்தில் இது ஒரு கெட்ட சகுனமாக கருதப்படுவதால் OnePlus எண்ணை '4' தவிர்க்கும்.
என்ன விலைக்கு வரும்? சரியான விலை விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை. இருப்பினும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 அல்லது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 லைட் விலை நிர்ணயம் நோர்ட் சிஇ 3 மற்றும் நோர்ட் சிஇ 3 லைட் உடன் ஒற்றுப்போகலாம். அதாவது நோர்ட் சிஇ 5 ரூ.28,000 பட்ஜெட்டிலும், நோர்ட் சிஇ 5 லைட் ரூ.18,000 பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
விலைக்குறைப்பை பெற்ற ஒன்பிளஸ் மாடல்: ரூ.2000 என்கிற நிரந்தர விலைக்குறைப்பை பெற்றுள்ளது - ஒன்பிளஸ் நோர்ட் சிஇ3 லைட் 5ஜி மாடல் தான். தற்போது இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜி ஆப்ஷன் ரூ.19,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கும், 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.21,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications