அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க.. அடுத்த மாசம் 7000mAh பேட்டரி உடன் 2 புதிய OnePlus போன்கள் வருது!
இப்போதைக்கு, கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 13டி தான் டெக் உலகின் 'டால்க்' ஆக இருக்கிறது. உண்மையிலேயே இது மிகவும் சுவாரசியமான காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக தெரிகிறது. ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் இதே போன்ற சுவாரசியத்தை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 13எஸ் என்கிற பெயரின் கீழ் இந்திய சந்தைக்கு வருவதை பற்றி நாங்கள் இங்கே பேசவில்லை. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஏஸ்-சீரீஸ் ஸ்மார்ட்போன்களை பற்றியது. அது ஒன்பிளஸ் ஏஸ் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும்; இது 2025 மே மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் ஏஸ் 5எஸ் (OnePlus Ace 5s) அல்லது ஒன்பிளஸ் ஏஸ் 5 சுப்ரீம் எடிஷன் (OnePlus Ace 5 Supreme Edition) மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷன் (OnePlus Ace 5 Racing Edition) என மொத்தம் இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்த போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 9400இ (MediaTek Dimensity 9400e) சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் முதல் ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷன் தான் மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்டை கொண்ட முதல் டிவைஸ் ஆக இருக்கும்.
இந்த சிப்செட் மீடியாடெக் டைமன்சிட்டி 9300 பிளஸ் சிப்செட்டின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். மேலும் இது TSMC-யின் 4என்எம் செயல்முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இது சிறந்த செயல்திறனை உறுதியளிக்கும் என்றும், இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை விஞ்சும் என்றும் கூறப்படுகிறது
ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.77-இன்ச் OLED LTPS பிளாட் டிஸ்பிளே
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி
ஒன்பிளஸ் ஏஸ் 5 சுப்ரீம் எடிஷனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.77-இன்ச் OLED LTPS பிளாட் டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிளஸ் சிப்செட்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்
- 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 7,000mAh பேட்டரி
ஒன்பிளஸ் ஏஸ் சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்படும் சில மாடல்கள் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் நோர்ட் சீரிஸின் கீழ் அறிமுகம் செய்யப்படுவதால், ஒன்பிளஸ் ஏஸ் 5 சுப்ரீம் எடிஷன் மற்றும் ஒன்பிளஸ் ஏஸ் 5 ரேஸிங் எடிஷன் ஸ்மார்ட்போன்கள் மீது ஒரு கண் வைப்பதில் எந்த தவறும் இல்லை. ஒன்பிளஸ் 13டி (அல்லது) ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை பொறுத்தவரை, இது நிச்சயம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும்.
ஆனால் இந்த முறை அனைத்து சந்தைகளிலும் ஒன்பிளஸ்13டி ஸ்மார்ட்போன் ஆனது அதே பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பலாமல் போகலாம். முன்னரே குறிப்பிட்டபடி ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை உலகளாவிய சந்தைகளில் - ஒரு புதிய எஸ்-சீரிஸின் கீழ் அறிமுகப்படுத்தலாம். இது ஜூன் 2025 இல் ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் (சீன) விலை விவரங்கள்: 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.39,805 க்கும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.42,150 க்கும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.44,490 க்கும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.46,835 க்கும் மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் - தோராயமாக ரூ.52,690 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








