Home
Mobile

அட்றா சக்கை.. Satellite Connectivity-ஐ பெறும் பழைய OnePlus போன்.. என்ன மாடல்?

எல்லோருடைய கவனமும் ஒன்பிளஸ் 13 மீதிருக்கும் நேரத்தில் பழைய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஒரு முக்கிய அம்சம் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது சாட்டிலைட் கனெக்டிக்ட்டி அம்சமாகும். இதனால் யூசர்களுக்கு என்ன பயன்? இது எந்த ஒன்பிளஸ் மாடலுக்கு வரவுள்ளது? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஸ்மார்ட்போனை (அதாவது ஒன்பிளஸ் 13 மாடலை) அறிமுகம் செய்வதற்கு முன்பாகவே, ஏற்கனவே அறிமுகமாகி விட்ட ஒன்பிளஸ் 12 மாடலுக்கு ஒரு மிகப்பெரிய அப்கிரேடை பெறலாம். இந்த அப்கிரேட் ஒன்பிளஸ் 12-க்கு வரும் அடுத்த மேஜர் ஓஎஸ் அப்டேட்டின் வழியாக கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்றா சக்கை.. Satellite Connectivity-ஐ பெறும் பழைய OnePlus போன்!

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கான லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 பீட்டாவில் சாட்டிலைட் கனெக்டிவிட்டிக்கான ஆதரவை காண முடிகிறது. கூகுள் நிறுவனமானது ஐக்யூ (iQoo), நத்திங் (Nothing), ஒன்பிளஸ் (OnePlus), ஒப்போ (Oppo), ரியல்மி (Realme), விவோ (Vivo), ஷாவ்மீ (Xiaomi) மற்றும் பல பிராண்டுகளின் பல ஆண்ட்ராய்டு போன்களுக்கு ஆண்ட்ராய்டு பீட்டா 2 வெர்ஷனை (Android 15 Beta 2 Version) வெளியிட தொடங்கி உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 12-க்கு வரும் செயற்கைக்கோள் இணைப்பு அம்சத்தை ஆண்ட்ராய்டு அத்தாரிட்டியின் சமீபத்திய அறிக்கையும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் ஒன்நார்மல்யூஸர்நேம் (@1NormalUsername) என்கிற எக்ஸ் பயனரும் கூட, ஆண்ட்ராய்டு 15 பீட்டாவின் லேட்டஸ்ட் வெர்ஷனை பெற்ற ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் ஆப்பில் "சாட்டிலைட் மொபைல் போன்" என்கிற ஒரு பகுதியை காட்டுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.

அட்றா சக்கை.. Satellite Connectivity-ஐ பெறும் பழைய OnePlus போன்!

ஒப்போ பைண்ட் என்3 ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 15 பீட்டா வெளியீட்டிலும் கூட, செட்டிங்ஸ் ஆப்பில் இதேபோன்ற குறியீடுளை காணமுடிந்தது. அறியாதோர்களுக்கு ஒன்பிளஸ் 12 மற்றும் ஒப்போ பைண்ட் என்3-இல் காணப்படும் குறியீடுகளுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம் நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும். ஆக இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கூடிய விரைவில் செயற்கைக்கோள் தகவல்தொடர்புக்கு ஆதரவளிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் கூட ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனிற்கு வரும் சாட்டிலைட் கனெக்டிவிட்டி அம்சம் பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த விவரங்களையும் அறிவிக்கவில்லை. இருப்பினும் இதுவரை வெளியான அறிக்கைகள் உண்மையாகும் பட்சத்தில், இந்த ஆண்டின் பிற்பகுதியில், ஒன்பிளஸ் 12-க்கு இந்த அப்கிரேட் வந்துசேரலாம்.

அட்றா சக்கை.. Satellite Connectivity-ஐ பெறும் பழைய OnePlus போன்!

சாட்டிலைட் கனெக்டிவிட்டி அம்சம் என்றால் என்ன? பொதுவாக ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி ஆனது சாட்ஃபோன் என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவது போலவே இது பூமியை சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் மூலம் தொலைபேசி நெட்வொர்க்குடன் இணைக்கும் ஒரு தொலைபேசியாகும். இதேபோன்ற அணுகுமுறையின் உருவானதே - ஸ்மார்ட்போன்களுக்கான சாட்டிலைட் கனெக்டிவிட்டி அம்சம் ஆகும்.

ஒன்பிளஸ் 13 எப்போது அறிமுகமாகும்? இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் (அதாவது டிசம்பரில்) அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஆனது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் அறிமுகமான பிறகு இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் அறிமுகமானது; இதே பாணி ஒன்பிளஸ் 13 அறிமுகத்திலும் பின்பற்றப்படும்.

ஒன்பிளஸ் 13 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது 2கே ரெசல்யூஷன் உடனான 6.8-இன்ச் மைக்ரோ-கர்வ்டு LTPO டிஸ்பிளே, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Snapdragon 8 Gen 4 SoC), 50எம்பி மெயின் கேமரா, அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸுடன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் போன்ற வைகளை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் 13 என்ன விலைக்கு அறிமுகமாகும்? நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரூ.64,999 என்கிற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனிலும் நாம் இதே போன்ற விலை நிர்ணயத்தை எதிர்பார்க்கலாம். இருப்பினும் இதில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் மேம்படுத்தல்களின் அடிப்படையில் சாத்தியமான விலையில் சில மாற்றங்களும் ஏற்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus to add Satellite Connectivity Feature in OnePlus 12 Next Major Android OS update
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X