ஒரேவொரு போனா இருக்கனும்! 24GB ரேம், 1TB மெமரி போதாது! ஜென்ரேஷன் 3 சிப்செட் வேணும்! அதுக்கும் மேல மாடல்?
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ மாடலே 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் போனாக வெளியாகும் என்று சீன ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில் அதற்கு முன்னதாகவே, ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ போன் வெளியாகிவிட்டது.
இதனால் "அதுக்கும் மேல" என்பது போல ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ (OnePlus Ace 2 Pro) மாடலில், 24 ஜிபி ரேம் மட்டுமல்லாமல் மற்றொரு பிரம்மாண்ட அம்சத்தை ஒன்பிளஸ் நிறுவனம் கொடுக்க இருப்பதாக இப்போது, தகவல் கசிந்துள்ளது. இந்த அம்சம் ரெட் மேஜிக் 8 எஸ் ப்ரோ (Red Magic 8S Pro) போனில் மட்டுமல்ல, வேறு எந்த போனிலும் இல்லாத ஒன்றாகும்.

அப்படியென்ன அம்சம் அது, என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் போன் என்று ஒன்பிளஸ் போனுக்கு கிடைக்க வேண்டிய மகுடம், வேறு போனுக்கு கிடைத்துவிட்டதால், அந்த நிறுவனத்தின் பிரியர்கள் சற்று சோர்வடைந்து விட்டனர்.
இது ஒன்பிளஸ் நிறுவத்தையும் சற்று சீண்டிவிட்டது போலவே தெரிகிறது. இந்த சூழலில், 24 ஜிபி ரேம் மட்டுமல்லாமல், வேறு எந்த போனில் இல்லாத சிப்செட் உடன் ஒன்பிளஸ் போனின் ஃப்ளாக்ஷிப் மாடல் வெளியாகும் என்று டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) தளத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த தகவல் கசிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே அது, ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன்தான் என்று, மற்ற ஊடகங்களும் செய்திகள் வெளியிடத் தொடங்கிவிட்டன. இருப்பினும், ஒன்பிளஸ் நிறுவனம், அதுதொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதேபோல மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால் அந்தத் தகவல் கிட்டத்தட்ட உறுதியானது போலவே தெரிகிறது.
ஒருவேளை ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் அந்த பிரம்மாண்ட சிப்செட் அறிமுகம் செய்யப்பட்டால், அந்த போனே உலகின் மிகவும் சக்தி வாய்ந்த் சிப்செட் கொண்ட போனாக இருக்கும். இந்த நேரத்தில் அந்த போனின் மொத்த அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வது நல்லது.
ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ அம்சங்கள்: இந்த ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போனில் 6.74 இன்ச் (1240*2772) கர்வ்ட் டிஸ்பிளே வருகிறது. 1440Hz பிடபுள்யூஎம் (PWM) டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 1.5K ரெசொலூஷன் வருகிறது. இந்த போனில் உலகிலேயே முதல் முறையாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 எஸ்ஓசி (Qualcomm Snapdragon 8 Gen 3 SoC) சிப்செட் கொடுக்கப்பட உள்ளதாகவே இப்போது, கசிந்த தகவல்கள் நமக்கு சொல்கின்றன.
இந்த சிப்செட் அடுத்த ஜெனரேஷன் தொழில்நுட்பமாகும். இதனால் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டின் மொத்த பார்வையும் ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ போன் மீது இருக்கிறது. இந்த போனில் ஓம்னிவிஷன் ஓவி64எம் (OmniVision OV64M) சென்சாருடன் கூடிய 64 எம்பி மெயின் கேமரா வருகிறது.
அதோடு சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் கூடிய 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + கேலக்ஸிகோர் ஜிசி02எம் (GalaxyCore GC02M) சென்சாருடன் கூடிய 2 எம்பி மேக்ரோ கேமரா கொடுக்கப்பட இருக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரி வருகிறது. இந்த மாடலின் டாப்-எண்ட் வேரியண்ட்டில் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த போன் செப்டம்பர் மாதம் வெளியாக வாய்ப்புள்ளது. விலை ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








