மார்க்கெட்ல புயலை கிளப்ப போகுது.. அடுத்த ஒன்பிளஸ் 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியாவில் ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த போனுக்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் என்6எக்ஸ் (OnePlus N6x) எனும் பெயரில் புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
அதாவது அமேசான் தளத்தில் பிரத்யேக மைக்ரோசைட்டில் இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இந்த போனின் வடிவமைப்பு, விலை மற்றும் அம்சங்கள் இன்னும் வெளியாகவில்லை.

விரைவில் இந்த ஒன்பிளஸ் என்6எக்ஸ் போனின் அனைத்து விவரங்களும் வெளியாகும். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் என்6 போனின் விலை மற்றும் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் என்6 அம்சங்கள் (OnePlus N6 Specifications): தரமான ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6360 அபெக்ஸ் (Octa Core MediaTek Dimensity 6360 Apex) சிப்செட் உடன் ஒன்பிளஸ் என்6 போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
அதேபோல் 6.8-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1200 நிட்ஸ் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் உள்ளன.
குறிப்பாக ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜென்ஓஎஸ் 16 (OxygenOS 16) மூலம் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
அதுவும் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் ஒன்பிளஸ் என்6 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor)வசதியும் இந்த புதிய ஒன்பிளஸ் போனில் உள்ளது.
50எம்பி ரியர் கேமரா உடன் இந்த புதிய ஒன்பிளஸ் போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக 10X வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதியும் இந்த புதிய போனில் உள்ளது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

வெப்ப மேலாண்மைக்காக 'வேப்பர் சேம்பர்' (vapour chamber)கூலிங் டெக்னாலஜி ஆதரவு கொண்டுள்ளது ஒன்பிளஸ் என்6 போன். மேலும் MIL-STD-810H இராணுவத் தரத்திலான நீடித்து உழைக்கும் சான்றிதழ் பெற்றுள்ளது இந்த புதிய போன். யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), பாட்டம்-போர்டெட் ஸ்பீக்கர் (Bottom-ported speaker)போன்ற வசதிகளும் இந்த புதிய போனில் உள்ளன.
இந்த போன் 8000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன.
4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் என்6 மாடலின் விலை ரூ.22,999-ஆக உள்ளது. மேலும் இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்டின் விலை ரூ.24,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications