மொத்த ஓட்டும் OnePlus-க்கு தான்.. 6 போன்கள், 4 டேப்லெட், 8 பட்ஸ்கள் மீது அமோக ஆபர்.. Summer Sale மே.8 முதல்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் தனது கோடைக்கால விற்பனையை (Summer Sale) அறிவித்துள்ளது. இதன்கீழ், ஒன்பிளஸின்பல்வேறு தயாரிப்புகளுக்கு - விலை குறைப்புகள், வங்கி தள்ளுபடிகள், எக்ஸ்சேஞ்ச் போனஸ்கள் மற்றும் வட்டியில்லா இஎம்ஐ விருப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையில் ஒன்பிளஸின் ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி டேப்லெட்கள் மற்றும் ஆடியோ டிவைஸ்கள் மீதும் சலுகைகள் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது ஆரம்பம்? ஒன்பிளஸின் சம்மர் சேல் ஆனது மே 8 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விற்பனை ஒன்பிளஸின் ஆன்லைன் ஸ்டோர், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ், அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகியவற்றில் நடைபெறும். அதே சமயம், ஆடியோ தயாரிப்புகள் மீதான சலுகைகள் மிந்த்ரா மற்றும் பிளிங்கிட் போன்ற தளங்களிலும் கிடைக்கும்.

ஒன்பிளஸ் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: லேட்டஸ்ட் ஒன்பிளஸ் 15 சீரிஸுக்கு நேரடி விலைக்குறைப்பு இல்லை, ஆனால் இது வங்கி தள்ளுபடிகளுடன் வாங்க கிடைக்கும். ரூ.77,999 விலையுள்ள ஒன்பிளஸ் 15 மாடலை ரூ.4,000 வங்கித் தள்ளுபடியுடன் ரூ. 73,999 க்கு வாங்கலாம். இதேபோல ரூ.54,999 விலையுள்ள ஒன்பிளஸ் 15ஆர் மாடலை ரூ.2,000 தள்ளுபடியுடன், கூடுதலாக ரூ.2,000 வங்கி தள்ளுபடியையும் பெற்றுள்ளது. இதனால், இந்த விற்பனையின் போது இதன் விலை ரூ.50,999 ஆக குறையும்
ஒன்பிளஸ் 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீதான சலுகைகள்: ஒன்பிளஸ் 13 மாடல் ஆனது ரூ.69,999 க்கு பதிலாக ரூ.7,000 தள்ளுபடி + ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று ரூ.57,999 க்கு வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் 13ஆர் மாடல் ஆனது ரூ.42,999 க்கு பதிலாக ரூ.3,000 தள்ளுபடி + ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று ரூ.37,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் 13எஸ் மாடல் ஆனது ரூ.54,999 க்கு பதிலாக ரூ.5,000 தள்ளுபடி + ரூ.3,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று ரூ.46,999 க்கு வாங்க கிடைக்கும். இதோடு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் 6 ஸ்மார்ட்போன் ஆனது அறிமுக விலையான ரூ.38,999 க்கு பதிலாக ரூ.2,000 வங்கி தள்ளுபடியுடன் ரூ.36,999 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் டேப்லெட் மீதான சலுகைகள்: ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் ஆனது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.1,000 தள்ளுபடி + ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் ஆனது ரூ.27,999 க்கு பதிலாக ரூ.1,000 தள்ளுபடி + ரூ 2,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று ரூ.24,999 வாங்க கிடைக்கும்
இதேபோல ஒன்பிளஸ் பேட் 3 மாடல் ஆனது ரூ.49,999 க்கு பதிலாக ரூ.1,000 தள்ளுபடி பெற்று ரூ.48,999 வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் பேட் 4 மாடல் ஆனது ரூ.59,999 க்கு பதிலாக ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று ரூ.54,999 வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் ஆடியோ தயாரிப்புகள் மீதான சலுகைகள்:
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 ஆனது ரூ.1,799 க்கு பதிலாக ரூ.1,499 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி ஆனது ரூ.2,099 பதிலாக ரூ.1,899 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 3ஆர் ஆனது ரூ.1,999 க்கு பதிலாக ரூ.1,599 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 3 ஆனது ரூ 2,499 க்கு பதிலாக ரூ.2,099 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 3 ப்ரோ ஆனது ரூ.3,099 க்கு பதிலாக ரூ.2,649 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 ப்ரோ ஆனது ரூ 3,999 க்கு பதிலாக ரூ.3,799 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் பட்ஸ் 4 ஆனது ரூ 6,499 க்கு பதிலாக ரூ.5,599 க்கு வாங்க கிடைக்கும்.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications