Home
Mobile

இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 6டி.!

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இக்கருவி சிறந்த மென்பொருள் தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்ற அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் வசதியுடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 6டி.!

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விற்பனையில் அதிக பரபரப்பை ஏற்படுத்தும் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல், அதற்கு தகுந்தபடி பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 6டி

ஒன்பிளஸ் 6டி

இணையதளம் மற்றும் டிவி சேனல்களில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பல்வேறு விளம்பரப் படங்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் பல்வேறு ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி உருவாக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த
ஸ்மார்ட்போனின் விளம்பரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும். சமீபத்திர் ஹாட்ஸ்டார் செயலி மற்றும் இந்தியா-பாக்கிஸ்தான் போட்டின் நடுவே இந்த ஸ்மார்ட்போனின் விளம்பரங்கள் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ வி11 ப்ரோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது,அந்தவரிசையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி இடம்பெற்றுள்ளது என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்

சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்

ஒன்பிளஸ் 6டி பிராண்ட் தூதர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் வெளிவந்த விளம்பரத்தில் இந்த ஸ்மார்ட்போனின் சில
குறிப்புகளை மிக அருமையாக தெரிவித்தார். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர் மற்றும் பல்வேறு
சிறப்பம்சங்களை அமிதாப் பச்சன் தெளிவாக எடுத்து தெரிவித்தார்.

அமேசான் வலைதளத்தில் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவித்துள்ளது,
மேலும் இந்த சாதனம் இப்போது வந்துள்ள ஐபோன்களை விட பல்வேறு மென்பொருள் அம்சங்களை கொண்டுள்ளது என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்

பெரிய பேட்டரி யூனிட்

பெரிய பேட்டரி யூனிட்

சிறந்த மற்றும் நீடித்த தினசரி பயன்பாட்டிற்கான பெரிய பேட்டரி யூனிட் மூலம் இந்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் இயக்கப்படுகிறது. பின்பு ஒரு முழு நாள் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்ப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம், வீடியோ, ஆப் போன்ற பயன்படுகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி அமைக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு வந்த ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை விட அதிக பேட்டரி ஆயுள் அம்சத்துடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் களமிறங்கும் என்று கூறப்படுகிறது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இதனுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்துடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவான டாஷ் சார்ஜிங் :

விரைவான டாஷ் சார்ஜிங் :

ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் பொதுவாக மேம்பட்ட டாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. மேலும் வேகமான சார்ஜ் வழங்கும் என்பதால் அனைத்து இடங்களிலும் எளிமையாக பயன்படுத்த முடியும். பின்பு சிறந்த டாஷ் சார்ஜ் இணைந்து நீண்ட காரணமாக மொபைல் பேட்டரி பிரச்சினைகள் தீர்க்க போகிறது என்று தான் கூறவேண்டும். வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 3 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு இதன் செல்பீ கேமரா 24எம்பி வரை இருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன்:

ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன்:

விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மாடல் உடன் ஒன்பிளஸ் டைப்-சி புல்லட் இயர்போன வெளியிடப்படும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீடித்து உழைக்கும் பயன்பாட்டுடன் இந்த சாதனம் வெளிவரும், பின்பு அரமிட் பைபர்கள் மூலம் உருவாக்கப்பட்ட உட்கம்பிகளை கொண்டதால் இந்த இயர்போன் இழுக்கப்படும்பொழுது எளிதாகச் சேதம் அடையாது என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது. சிரஸ் லாஜிகுடன் கூடிய டிஎசி கொண்டு கூடுதல் டைனமிக் ரேன்ஜ் மற்றும் அதிக சிக்னல் - நாய்ஸ் விகிதத்துடன் கூடிய சிறந்த ஆடியோ அனுபவத்தை இந்த புல்லட் இயர்போன் நமக்கு வழங்குகிறது.

புதிதாக அறிமுகமாக இருக்கும் ஒன் பிளஸ் 6T இல் திரையிலேயே இன்பில்ட் கைரேகை சென்சார் இருக்கும் என்று ஏற்கெனவே நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், இப்போது இந்த இயர்போனும் அத்துடன் வெளியிட இருப்பதால் ஒன் பிளஸ் 6T இல் 3.5mm ஹெட்போன் ஜாக்-கும் நிச்சயம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்போனை ஒன் பிளஸ் 6வு மட்டுமின்றி இதே அளவு டைப்-சி போர்ட் உடைய அணைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
OnePlus proves it's the master of marketing with 6T's latest advertising campaign: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X