OnePlus மினி போன்.. OLED டிஸ்பிளே, 50MP+50MP கேமரா, 6200mAh பேட்டரி.. அறிமுகம் கன்ஃபார்ம்.. எப்போது?
ஒப்போ (Oppo) நிறுவனமானது டைமன்சிட்டி 9400 பிளஸ் (Dimensity 9400 Plus) சிப்செட் உடனான ஒரு மினி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வருகிற ஏப்ரல் 10 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. அது ஒப்போ பைண்ட் எக்ஸ்8எஸ் (Oppo Find X8s) மாடல் ஆகும். இதேபோல ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடனான ஒரு மினி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை வருகிற ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.
அது ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) அல்லது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13) ஸ்மார்ட்போனாக இருக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைவர் ஆன லூயிஸ் ஜீ (OnePlus President Louis Jie), ஒன்பிளஸ் மினி ஸ்மார்ட்போனின் வெளியீட்டை விளம்பரப்படுத்த தொடங்கி உள்ளார். பயனர்களிடமிருந்து ஒரு சிறிய ஃபிளாக்ஷிப் போன் தொடர்பான உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் அவர் ஒப்புக்கொள்கிறார்.

மேலும் இந்த விஷயத்தில் ஒரு அப்டேட்டை வழங்குமாறு பல கோரிக்கைகள் தனக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். பின்னர் ஸ்மால் ஸ்க்ரீன் கொண்ட ஸ்மார்ட்போனால் எந்தெந்த பயன்பாட்டு சூழ்நிலைகள் அதிகம் பயனளிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள் என்பது குறித்து பார்வையாளர்களிடம் அவர்களின் கருத்துக்களை கேட்கிறார். இப்படியாக அவர் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய மினி ஸ்மார்ட்போனில் பணியாற்றுவதை மேலோட்டமாக உறுதிப்படுத்தியுள்ளார்
ஒன்பிளஸ் 13 மினி அல்லது ஒன்பிளஸ் 13டி குறித்த யூகங்கள் ஒருபக்கம் இருக்க "கூறப்படும்" ஒன்பிளஸ் மினி ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன. இதன் மூலம் ஒன்பிளஸ் 13டி அல்லது ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனின் ரியர் டிசைன் (Rear Design) பற்றிய ஒரு யோசனை நமக்கு கிடைக்கிறது.
டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த புகைப்படங்கள் வழியாக, ஒன்பிளஸ் 13டி அல்லது ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் ஒப்போ 13 சீரீஸில் (Oppo 13 Series) இருப்பதை போன்ற ரியர் டிசைனை காட்டுகிறது. இரண்டுமே ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட்டை (Square camera unit) காட்டுகின்றன. அதில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட 2 கேமராக்கள் உள்ளன. அதனுடன் ஒரு எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஒரு சென்சாரும் உள்ளது.
ஒன்பிளஸ் 13டி அல்லது ஒன்பிளஸ் 13 மினி ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரு லேட்டஸ்ட் லீக் தகவலின்படி, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 6200mAh பேட்டரியை பேக் செய்யும்.
நினைவூட்டும் வண்ணம் இது ஒன்பிளஸ் 13 மாடலில் இருப்பதை விட பெரிய பேட்டரி ஆகும். ஒன்பிளஸ் 13 மாடலில் 6000mAh பேட்டரி மட்டுமே உள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஐபோன் போன்ற வடிவமைப்பை (iPhone like design) பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது முன்னரே குறிப்பிட்டபடி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஊடான 6.3 ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் உட்பொதிக்கப்பட்ட ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Optical Finger Print Sensor) உடன் வரலாம். ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஏப்ரல் மாதத்தில், சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை இது (OnePlus 13T or OnePlus 13 Mini Price) ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








