Home
Mobile

வாங்குறதுக்கு தவம் கெடக்கலாம்.. 64எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. 16ஜிபி ரேம்.. எந்த போன்?

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஓப்பன் எனும் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போனை வரும் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் போன் தனித்துவமான அம்சங்கள் மற்றும் தரமான வடிவமைப்புடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) வெளியீட்டுத் தேதியை டிப்ஸ்டர் மேக்ஸ் ஜம்போர் அறிவித்துள்ளார். ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஒன்பிளஸ் ஓப்பன் போனின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

64எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. 16ஜிபி ரேம்.. எந்த போன்?

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 8+ Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம். குறிப்பாக இது ஒரு சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். குறிப்பாக கேமிங் பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

48எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி செகண்டரி சென்சார் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஓப்பன் போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஓப்பன் போன். அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 7.8-இன்ச் அமோலெட் (AMOLED)) டிஸ்பிளேவுடன் இந்த ஒன்பிளஸ் ஓப்பன் வெளிவரும். பின்பு இந்த போனில் 6.3-இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவும் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங்கை ஆதரிக்கும் 4800mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை (Wireless Charging Support)சேர்ப்பது குறித்தும் ஒன்பிளஸ் நிறுவனம் பரிசீலிக்கலாம். இது சாத்தியமாகும் பட்சத்தில், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கலாம்.

16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது ஒப்போ ஃபைண்ட் என்2 (Oppo Find N2)ஸ்மார்ட்போனின் டிசைனில் இருந்து சில விஷயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அறியாதோர்க்கு ஒப்போவின் துணை நிறுவனங்களில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்றாகும். ஒப்போவின் தாய் நிறுவனம் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (BBK Electronics corporation) ஆகும்.

64எம்பி கேமரா.. 100W சார்ஜிங்.. 16ஜிபி ரேம்.. எந்த போன்?

அதேபோல் இந்தியாவில் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ரூ.1,10,000 விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் சற்று உயர்வான விலையில் போன்களை அறிமுகம் செய்தாலும் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.

photo courtesy: Onleaks & Smartprix

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Open will be launched on October 19: check specifications, price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X