Home
Mobile

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த OnePlus போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 64எம்பி கேமரா.. 512ஜிபி மெமரி.. எந்த மாடல்?

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒன்பிளஸ் ஓப்பன் போன் ஆனது நாளை (அக்டோபர் 19) அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் ஓப்பன் போன் ஆனது சாம்சங், டெக்னோ, மோட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் மடங்கக்கூடிய போன்களுக்கு போட்டியாக வெளிவர இருக்கிறது.

ட்ரிபிள் ரியர் கேமரா, பெரிய டிஸ்பிளே மற்றும் தரமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஓப்பன் போன் வெளிவர இருப்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி உள்ளது. அதேபோல் இந்த புதிய ஒன்பிளஸ் போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும். மேலும் இப்போது ஒன்பிளஸ் ஓப்பன் போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த OnePlus போனுக்கு பல பேர் வெயிட்டிங்..

அதாவது இந்த ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஆனது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 7.8-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு இந்த போனில் 6.3-இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவும் உள்ளது. இதுதவிர 2400 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 8+ Gen 2 SoC) வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஓப்பன் போன். குறிப்பாக இது ஒரு சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். குறிப்பாக கேமிங் பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த OnePlus போனுக்கு பல பேர் வெயிட்டிங்..

அதேபோல் 48எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி செகண்டரி சென்சார் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஓப்பன் போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.

குறிப்பாக எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஓப்பன் போன். மேலும் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த OnePlus போனுக்கு பல பேர் வெயிட்டிங்..

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங்கை ஆதரிக்கும் 4800mAh பேட்டரி வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் (Wireless Charging Support) வசதியும் இடம்பெறும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இது சாத்தியமாகும் பட்சத்தில், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கலாம்.

இந்த ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் 18ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் வெளிவரும். பின்பு இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக்கு லான்ச் ஆகும் இந்த OnePlus போனுக்கு பல பேர் வெயிட்டிங்..

இந்தியாவில் ரூ.1,41,490 விலையில் அறிமுகமாகும் இந்த ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன். குறிப்பாக விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் தகவலின்படி, இந்த ஒன்பிளஸ் ஓப்பன் போன் ஆனது வரும் அக்டோபர் 27-ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும். மேலும் நாளை (அக்டோபர் 19) ஒன்பிளஸ் ஓப்பன் போனின் வெளியீட்டு நிகழ்வு இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Open will be launched in India tomorrow: check price, sale date, specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X