7.8-இன்ச் டிஸ்பிளே.. 100W சார்ஜிங்.. 512GB மெமரி.. அக்.19 ல் இந்தியாவுக்கு வரும் புது ஒன்பிளஸ் போன்..
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) போனின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 19-ம் (October 19) தேதி அன்று இந்த ஒன்பிளஸ் ஓப்பன் எனும் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஓப்பன் போன் ஆனது சாம்சங், மோட்டோ நிறுவனங்களின் மடங்கக்கூடிய போன்களுக்கு போட்டியாக வெளிவர உள்ளது.
மேலும் இந்த புதிய ஒன்பிளஸ் போன் ஆனது அமேசான் (Amazon) மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 8+ Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம். குறிப்பாக இது ஒரு சக்திவாய்ந்த சிப்செட் ஆகும். குறிப்பாக கேமிங் பயன்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் மிக அருமையாகப் பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே கேமிங் பயனர்கள் இந்த போனை நம்பி வாங்கலாம்.
48எம்பி பிரைமரி கேமரா + 48எம்பி செகண்டரி சென்சார் + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஓப்பன் போன். எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த போன்.
அதேபோல் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் ஓப்பன் போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 7.8-இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவுடன் இந்த ஒன்பிளஸ் ஓப்பன் வெளிவரும். பின்பு இந்த போனில் 6.3-இன்ச் அவுட்டர் டிஸ்பிளேவும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே ஒரு சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும். குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங்கை ஆதரிக்கும் 4800mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை (Wireless Charging Support)சேர்ப்பது குறித்தும் ஒன்பிளஸ் நிறுவனம் பரிசீலிக்கலாம். இது சாத்தியமாகும் பட்சத்தில், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கலாம்.
18ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் வெளிவரும். பின்பு இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது ஒப்போ ஃபைண்ட் என்2 (Oppo Find N2)ஸ்மார்ட்போனின் டிசைனில் இருந்து சில விஷயங்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் ஒன்பிளஸ் ஓப்பன் போன் ஆனது இந்தியாவில் ரூ.1,41,490 விலையில் அறிமுகமாகும் என்று ஆன்லைனில் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சாம்சங், மோட்டோ நிறுவனங்களின் மடங்கக்கூடிய போன்களை விட இந்த ஒன்பிளஸ் ஓப்பன் போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்த ஆண்டு இறுதியில் ஒன்பிளஸ் நிறுவனம் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








