ஒட்டுமொத்த OnePlus ரசிக பட்டாளமும் ஹேப்பி.. ஒன்பிளஸ் ஓப்பன் போனின் இந்திய விலை மற்றும் அறிமுக தேதி லீக்!
நீங்களொரு தீவிரமான ஒன்பிளஸ் ரசிகராக இல்லாவிட்டாலும் கூட ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் இந்நேரம் உங்கள் காதுகளுக்கு வந்து சேர்ந்திருக்கும். அறியாதோர்களுக்கு, இந்த பிராண்டின் முதல் மடங்கக்கூடிய ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) அறிமுகத்திற்கு தயாராக உள்ளது.
ஒன்பிளஸ் ஒப்பன் எப்போது அறிமுகமாகும்? இது ஆகஸ்ட் மாத இறுதியில் அதாவது இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பரில் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி (Launch Date) இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் (முன்னதாக) ஒன்பிளஸ் ஓப்பன் போனின் அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு ஆன்லைனில் லீக் ஆகியிருந்தது.

இதற்கிடையில், டிப்ஸ்டர் யோகேஷ் ப்ரார் வழியாக ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன என்கிற தகவலை எக்ஸ் (X) வழியாக பகிர்ந்துள்ளார். அறியாதோர்களுக்கு எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ட்விட்டர் (Twitter) நிறுவனத்தின் பெயர் எக்ஸ் என்று மாற்றப்பட்டுள்ளது
கிடைக்கப்பெற்ற தகவலின்படி ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயமானது ரூ.1.2 லட்சத்திற்கும் குறைவாக இருக்கலாம். அதாவது ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) மாடலை விட ஒப்பீட்டளவில் மலிவானதாக இருக்கும்; நினைவூட்டும் வண்ணம் இதன் விலை ரூ.1,54,999 ஆகும்.
இருப்பினும், இந்திய சந்தையில் இதை விட மிகவும் மலிவான ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது டெக்னோ நிறுவனத்திடம் உள்ளது. அது டெக்னோ ஃபாண்டம் வி ஃபோல்ட் 5ஜி (TECNO Phantom V Fold 5G) மாடலாகும். இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ரூ.88,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் (Google) நிறுவனமும் கூட அதன் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போனான கூகுள் பிக்சல் ஃபோல்ட் (Pixel Fold) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திவிட்டது. இருப்பினும் இது இன்னும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை. இந்திய சந்தையில் இது ரூ.147,490 க்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை பொறுத்தவரை, இது ஒப்போ ஃபைண்ட் என்2 (Oppo Find N2) ஸ்மார்ட்போனின் டிசைனில் இருந்து சில விஷயங்களை பெற்றுக்கொள்ளலாம். அறியாதோர்க்கு ஒப்போவின் துணை நிறுவனங்களில் ஒன்பிளஸ் நிறுவனமும் ஒன்றாகும். ஒப்போவின் தாய் நிறுவனம் பிபிகே எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் (BBK Electronics corporation) ஆகும்.
ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தவரை, இது இன்னும் அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 8+ Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம், மேலும் இது 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) ஆதரவு உடனான அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 100W சூப்பர்வூக் (SuperVOOC) சார்ஜிங்கை ஆதரிக்கும் 4800mAh பேட்டரி பேக் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை (Wireless Charging Support) சேர்ப்பது குறித்தும் ஒன்பிளஸ் நிறுவனம் பரிசீலிக்கலாம். இது சாத்தியமாகும் பட்சத்தில், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கலாம்.
கேமராக்களை பொறுத்தவரை, பின்புறத்தில் ஹாசல்பிளாட் (Hasselblad. ) பிராண்டால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா சென்சார்கள் இடம்பெறலாம். அதில் 50 மெகாபிக்சல் (ஐஎம்எக்ஸ்890) மெயின் கேமரா + ஒரு அல்ட்ரா-வைட் கேமரா + ஒரு பெரிஸ்கோப் லென்ஸ் (Periscope Lens) ஆகியவைகள் பேக் செய்யப்படலாம்.
மேலும் ஒன்பிளஸ் கவர் டிஸ்ப்ளேவின் (Cover Display) ஹோல்-பஞ்ச் கட்அவுட்டின் உள்ளே 32 மெகாபிக்சல் செல்பீ கேமராவையும் கொண்டிருக்கலாம். இதுதவிர மெயின் டிஸ்பிளேவில் மேலும் ஒரு செல்பீ கேமரா இருக்கலாம். இதுவரை வெளியான ரெண்டர் புகைப்படங்கள் (Render Photos) ஆனது பிளாக் கலர் வேரியண்ட்-ஐ மட்டுமே காட்சிப்படுத்துகிறது. இருப்பினும் ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் ஒரு கலர் ஆஃப்ஷனையும் அறிமுகப்படுத்தலாம்.
Photo Courtesy: Onleaks & Smartprix


Click it and Unblock the Notifications








