Home
Mobile

OnePlus நக்கல்.. நீங்கலாம் மூடுங்க.. நாங்க திறக்குறோம்.. அடுத்த ஸ்மார்ட்போன் அறிவிப்பு.. என்ன மாடல்?

விஷயம் தெரியாதவர்கள் தான்.. ஒன்பிளஸ் 12 5ஜி (OnePlus 12 5G) மாடல் தான் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போன் என்று கூறுவார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ஒன்பிளஸ் 12 5ஜி ஆனது வருகிற 2023 டிசம்பர் மாத இறுதியில் தான் அறிமுகம் செய்யப்படும்.

ஒன்பிளஸ் 12-க்கு முன்னதாகவே இன்னொரு புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. ஒரு "நக்கலான" ட்வீட் வழியாக ஒன்பிளஸ் தனது அடுத்த ஸ்மார்ட்போனின் மாடல் பெயரை சூசகமாக அறிவித்து உள்ளது.

OnePlus-ன் அடுத்த ஸ்மார்ட்போன் அறிவிப்பு.. என்ன மாடல்?

என்ன மாடல்? "மற்றவர்கள் எல்லோரும் ஃபோல்ட் செய்யும் போது (அதாவது மூடும் போது), நாங்கள் ஓப்பன் செய்கிறோம் (அதாவது திறக்கிறோம்)" என்று ஒன்பிளஸ் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. இந்த ட்வீட்டின் மூலம் ஒன்பிளஸின் அடுத்த ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) தான் அறிமுகமாகும் என்பதை வெளிப்படையாகவே புரிந்துகொள்ள முடிகிறது.

எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் ஓப்பன் என்கிற பெயர் குறிப்பிடுவது போலவே, இதுவொரு ஃபோல்டபிள் போனாக (Foldable Phone) இருக்கும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த முதல் ஃபோல்டபிள் டிஸ்பிளே ஸ்மார்ட்போன் ஆனது செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்பாகவே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் சரியாக, இது ஆகஸ்ட் 29 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படலாம்.

என்ன விலைக்கு அறிமுகமாகும்? 2023 ஆகஸ்ட் மாதம் நடக்கும் அறிமுகத்தை தொடர்ந்து, செப்டம்பர் மாதத்திலேயே ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் அதன் விற்பனையை தொடங்கலாம். இந்திய விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் தோராயமாக ரூ.1,24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது கிளாம்ஷெல் போன்ற ஃபிளிப் மெக்கானிசத்திற்கு (Clamshell-like flip mechanism) பதிலாக சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட்டை போன்ற ஃபோல்டிங் டிசைனை (Folding Design) கொண்டிருக்கும். இந்த போனில் ஒன்பிளஸின் மிகவும் பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் (Alert Slider) அம்சமும் இடம்பெறலாம்.

ஆன்லீக்ஸ் உடன் இணைந்து ஸ்மார்ட்பிரிக்ஸ் வெளியிட்ட ரெண்டர் புகைப்படங்களின்படி, ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது லெதர் பேக் (Leather Back) மற்றும் ஸ்லிம் பெசல்களை (Slim Bezels) கொண்ட பெரிய எக்ஸ்டெர்னல் டிஸ்பிளேவை (External Display) கொண்டிருக்கும். மேலும் அதில் செல்பீ கேமராவிற்கான ஹோல்-பஞ்ச் கட்அவுட் ஒன்றும் இருக்கும். மெயின் டிஸ்பிளேவில் மேலும் ஒரு செல்பீ கேமரா இடம்பெறலாம்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஹாசல்பிளாட் (Hasselblad) நிறுவனத்தால் ட்யூன் செய்யப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் பேக் செய்யப்படலாம். இது ஒன்பிளஸ் 11 சீரீஸில் நாம் பார்த்ததை போலவே வட்ட வடிவிலான கேமரா அமைப்பாக (Round Camera Deck) இருக்கலாம். பெரும்பாலும் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் (Snapdragon 8+ Gen 2 SoC) மூலம் இயக்கப்படலாம்.

மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அமோஎல்இடி எல்டிபிஓ 2கே டிஸ்பிளேவை (20Hz AMOLED LTPO 2K display) கொண்டிருக்கலாம். இது 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு கொண்ட 4800எம்ஏஎச் பேட்டயை உள்ளடக்கியிருக்கலாம். இதுவொரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருப்பதால் இதில் வயர்லெஸ் சார்ஜிங்கும் (Wireless Charging) சேர்க்கப்படலாம். இது உண்மையாகும் பட்சத்தில் ஒன்பிளஸ் போன்களில் இதுவொரு அரிய அம்சமாக இருக்கும்.

இந்தியாவில், ஒன்பிளஸ் பிறாண்டிற்கு இருக்கும் பிரபலத்தன்மையை கருத்தில் கொண்டால், ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது நிச்சயம் சீனாவிற்கு மட்டுமான ஒரு மாடலாக இருக்காது; கண்டிப்பாக இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால், ஒன்பிளஸ் ஓப்பன் ஆனது ஒட்டுமொத்த சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் மற்றும் இஸட் ஃபிளிப் (Samsung Galaxy Z Fold and Z Flip) மாடல்களை தூக்கி சாப்பிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Open Name Confirmed Expected to Launch on August 29 Check Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X