Home
Mobile

OnePlus Open இந்தியாவில் அறிமுகம்: என்ன விலை? எப்போது விற்பனை? என்னென்ன அம்சங்கள்?

இந்த 2023 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open), இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? எப்போது முதல் விற்பனை? இதோ விவரங்கள்:

இந்தியாவில் ஒன்பிளஸ் ஓப்பன் விலை: இந்திய சந்தையில் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.1,39,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

OnePlus Open இந்தியாவில் அறிமுகம்: என்ன விலை? எப்போது விற்பனை?

விற்பனையை பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ ஒன்பிளஸ் இணையதளம், அமேசான் மற்றும் நாடு முழுவதும் உள்ள சில்லறை விற்பனை கடைகள் வழியாக வாங்க கிடைக்கும். ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் ப்ரீ-ஆர்ட்ர்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்த ஸ்மார்ட்போனின் திறந்த விற்பனையானது (ஓப்பன் சேல்) வருகிற அக்டோபர் 27 அன்று தொடங்கும்.

விற்பனை சலுகைகளை ஒன்பிளஸ் ஓப்பன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட டிவைஸ்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும் போது) ரூ.8000 மதிப்பிலான டிரேட்-இன் போனஸை பெறலாம். வங்கி சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) மற்றும் ஒன்கார்டு (OneCard) வழியாக ரூ.5000 உடனடி தள்ளுபடியை பெறலாம்.

ஒன்பிளஸ் ஓப்பன் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 13.2 கொண்டு இயங்குகிறது. இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பனின் இன்னார் டிஸ்பிளேவாகும்.

வெளிப்புறத்தில் 10-120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட் மற்றும் 2,800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இந்த இரண்டு டிஸ்பிளேக்களுமே TÜV Rheinland Intelligent Eye Care சான்றிதழை பெற்றுள்ளன.

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது 16GB LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை 4 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி அளவில் விர்ச்சுவல் ரேம் ஆக பயன்படுத்திக்கொள்ள முடியும்

கேமராக்களை பொறுத்தவரை, ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 1/1.43-இன்ச் சோனி LYT-T808 "பிக்சல் ஸ்டேக்டு" CMOS சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS), 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் ஒரு எப்/1.7 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பனில் 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. அது ஓஐஎஸ், இஐஎஸ், 33.4-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.6 அபெர்க்ஷர் உடன் கூடிய OmniVision OV64B சென்சார் உள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது.

மூன்றாவது கேமராவாக இது 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது; இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும். இது இஐஎஸ் உடனான சோனி IMX581 சென்சார், 114-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில், இஐஎஸ் மற்றும் 91-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 20-மெகாபிக்சல் மெயின் கேமராவைப் பெறுவீர்கள். மேலும் இஐஎஸ், 88.5-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும்.

512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜுடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி 3.1 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oneplus Open Launched in India Check Price Pre order Sale Date Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X