OnePlus Open இன்று இந்தியாவில் அறிமுகம்.. லைவ் ஸ்ட்ரீமிங், விலை மற்றும் அம்சங்கள்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் (First Foldable Smartphone) ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) இன்று, அதாவது அக்.19 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி? இது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் ஓப்பன் வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீமிங் (Live Streaming) செய்வது எப்படி? ஒன்பிளஸ் ஓப்பன் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு நிகழ்வானது இன்று (அக்டோபர் 19) இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் (OnePlus Official YouTube Channel) நேரடியாக ஒளிபரப்பப்டும்.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் சாத்தியமான அம்சங்கள்: இதுவரை கிடைத்த எல்லா தகவல்களுமே, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் சில அற்புதமான அம்சங்கள் இடம்பெறும் என்பதை குறிப்பிடுகின்றன. குறிப்பாக இது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple Rear Camera Setup) கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் கேமரா செட்டப்பில் மேம்படுத்தப்பட்ட ஜூமிங் (enhanced zoom capabilities) திறன்களுக்காக பெரிஸ்கோப் லென்ஸ் (periscope lens) இணைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் ஒப்பனை வசதியாக அன்லாக் (Unlock) செய்வதற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) மற்றும் பஞ்ச்-ஹோல் கேமராவுடன் (punch-hole camera) கூடிய டிஸ்பிளே இடம்பெறலாம்.
ஒன்பிளஸ் ஒப்பன் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (octa-core Qualcomm Snapdragon 8 Gen 2 chipset) மூலம் இயக்கப்படும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, இது உண்மையாகும் பட்சத்தில், இந்த ஸ்மார்ட்போன் ஒரு வலுவான செயல்திறனை உறுதி செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மேலும் இது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 operating system) கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது ஒன்பிளஸ் ஆக்ஸிஜென்ஓஎஸ் ஃபோல்ட் (OnePlus's OxygenOS Fold) இன்டர்பேஸ் உடன் கஸ்டமைஸ்டு (customized) செய்யப்பட்டதாக இருக்கும்.
ஒன்பிளஸ் ஆக்ஸிஜென்ஓஎஸ் ஃபோல்ட் ஓஎஸ் ஆனது தடையற்ற மற்றும் திறமையான யூஸர் எக்ஸ்பீரியன்ஸை (seamless and efficient user experience) உறுதியளிக்கிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரதான கேமரா (48MP Main Camera), 48எம்பி அல்ட்ரா-வைட் கேமரா (48MP Ultra Wide Camera) மற்றும் 64எம்பி டெலிஃபோட்டோ கேமரா (64MP Telephoto Camera) ஆகியவைகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் சாத்தியமான கலர் ஆப்ஷன்கள் மற்றும் விலை நிர்ணயம்: கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரை (கிடைக்கப்பெற்ற லீக்ஸ் தகவல்களின் படி) வரவிருக்கும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் பிளாக் (Black) மற்றும் க்ரீன் (Green) கலர்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனின் விலையை $1,699 ஆக நிர்ணயம் செய்யலாம். இந்திய ரூபாய் மதிப்பின்படி இது தோராயமாக ரூ.1,41,405 ஆகும். இந்த விலை சமீபத்தில் வெளியிடப்பட்ட சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) உடன் ஒப்பிடும்போது சற்றே மலிவானதாக உள்ளது.
சமீபத்தில் ஹானர் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாக ஹானர் மேஜிக் விஎஸ் 2 அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. 7.92-இன்ச் OLED இன்னர் டிஸ்பிளே, 6.43-இன்ச் OLED கவர் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வரும் இந்த போனின் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.80,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








