Home
Mobile

மொத்தம் 5 கேமரா.. 2 டிஸ்பிளே.. OnePlus Open விலையை சொன்னா.. சும்மா ஆடி போயிடுவீங்க.. எப்போது முதல் விற்பனை?

மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான அபிஷேக் யாதவ், ஒன்பிளஸின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஓப்பன் (OnePlus Open) ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் (Price in India) மற்றும் விற்பனை தேதி (Sale Date) குறித்த விவரங்களை பகிர்ந்துள்ளார்.

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது என்ன விலைக்கு அறிமுகமாகும்? எப்போது முதல் விற்பனைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

OnePlus Open விலையை சொன்னா ஆடி போயிடுவீங்க.. எப்போது முதல் விற்பனை?

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது டூயல் டிஸ்பிளே செட்டப்பை (Dual Display Setup) கொண்டிருக்கும். இன்னர் டிஸ்பிளேவானது (Inner Display) 7.8 இன்ச் அமோஎல்இடி (AMOLED) டிஸ்பிளேவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது 2கே ரெசல்யூஷன் (2K Resolution) மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான (120Hz Refresh Rate) ஆதரவை கொண்டிருக்கலாம். அவுட்டர் டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.31 இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது பழைய ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், பலருக்கும் இதுவொரு ஏமாற்றமாக இருக்கலாம்; ஏனென்றால் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) ஏற்கனவே வெளியாகிவிட்டது.

ப்ராசஸரை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இது LPDDR5x ரேம் மற்றும் UFS 4.0 ஸ்டோரேஜிற்கான ஆதரவுடன், மல்டி-டாஸ்கிங் மற்றும் ஆப் பெர்ஃபார்மென்ஸை மின்னல் வேகத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரியான ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இடம்பெறலாம். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் போன்களில் நாம் பார்க்கும் அலர்ட் ஸ்லைடர் (Alert Slider) அம்சமும் கூட ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் இடம்பெறும் என்பதை வெளியான டீஸர்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, இதில் 48 மெகாபிக்சல் மெயின் கேமரா + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் + சிறந்த ஜூமிங் திறன்களை (Best Zooming Capabilities) வழங்கும் 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவற்றை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் மெயின் கேமரா + 20 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா ஆகியவற்றை காணலாம். இவற்றில் ஒரு கேமரா கவர் டிஸ்ப்ளேவில் இருக்கலாம், மற்றொன்று ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனை விரித்த பிறகு தெரியும்படி வடிவமைக்கப்படலாம். ஆகமொத்தம் ஒன்பிளஸ் ஓப்பனில் மொத்தம் 5 கேமராக்கள் இடம்பெறலாம்.

கடைசியாக இது 4,800mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் போன்களுடன் ஒரு சார்ஜரை வழங்குவதை இன்னும் நிறுத்தாததால், ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் ரீடெயில் பாக்ஸில் நிச்சயம் ஒரு சார்ஜர் அனுப்பப்படும்.

ஒன்பிளஸ் ஓப்பன் இந்திய விலை மற்றும் விற்பனை? அபிஷேக் யாதவ்வின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.1,39,999 க்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விற்பனை தேதியை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை அக்டோபர் 27, 2023 அன்று நடைபெறும் என்றும் இந்த டிப்ஸ்டர் கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Open Foldable Smartphone India price and Sale date Revealed ahead of October 19 Launch Event
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X