Home
Mobile

Special Edition-னா இப்படி இருக்கணும்! இந்தியாவில் OnePlus-ன் புதிய Apex மாடல்.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் எது என்கிற கேள்விக்கு.. ஏற்கனவே உங்களுக்கு பதில் தெரியும் என்றால்.. ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று அந்த பதில் மாறப்போகிறது. ஏனென்றால் ஒன்பிளஸின் 'மோஸ்ட் எக்ஸ்பென்சிவ் ஸ்மார்ட்போன்' (Most Expensive Smartphone) ஆன ஓப்பன் ஓப்பன் (Open Open) மாடலின் ஸ்பெஷல் எடிஷன் (Special Edition) ஆகஸ்ட் 7 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) எனக்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிஷனின் வழியாக ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது கிரிம்சன் ஷேடோ கலரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. "இந்த எடிஷன் ஒரு அப்டேட்டை விட அதிகம்" என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படி இந்த போனில் என்னென்ன விஷயங்கள் புதியதாக இருக்கும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:

Special Edition-னா இப்படி இருக்கணும்.. OnePlus-ன் புதிய Apex மாடல்!

என்னென்ன அம்சங்கள், வடிவமைப்பு மாற்றங்கள் இடம்பெறும்? ஒன்பிளஸ் நிறுவனம் ஹசல்பிளாட் 590சிடபுள்யூ 60 இயர்ஸ் விக்டர் ரெட் எடிஷனுக்கு (Hasselblad 503CW 60 Years Victor Red Edition) மரியாதை செலுத்தும் வகையில் அபெக்ஸ் எடிஷனை வெளியிடுகிறது. அதாவது வழக்கமான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் நீங்கள் பெறக்கூடிய வழக்கமான ஹசல்பிளாட் ட்யூனிங் மற்றும் அம்சங்களைத்தான் இந்த போனும் கொண்டிருக்கும்; ஆனால் புதிய வடிவமைப்பின் கீழ் கொண்டிருக்கும்!

ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஆனது "பிரீமியம் வீகன் லெதர்" பினிஷ் கொண்டதாக இருக்கும். இது கிரிம்சன் ரெட் கலரில் உள்ளது. மேலும் அலெர்ட் ஸ்லைடரில் வைரம் போன்ற வடிவமும், ஆரஞ்சு நிற அசென்ட்களும் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் "மேம்படுத்தப்பட்ட ஸ்டோரேஜ், ஏஐ இமேஜ் எடிட்டிங் அம்சங்கள் மற்றும் புதுமையான செக்யூரிட்டி அம்சங்கள்" இடம்பெறும் என்றும் ஒன்பிளஸ் குறிப்பிடுகிறது.

Special Edition-னா இப்படி இருக்கணும்.. OnePlus-ன் புதிய Apex மாடல்!

ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் குறித்த ப்ராடெக்ட் பேஜின்படி, ​​இந்த ஸ்மார்ட்போன் 3 வருட ஓஎஸ் மேம்படுத்தல்களை பெறும். நினைவூட்டும் வண்ணம் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது 4 வருட ஓஎஸ் மேம்படுத்தல்களை பெறும் என்கிற வாக்குறுதியை கொண்டுள்ளது. புதிய அபெக்ஸ் எடிஷன் ஆனது ஆண்ட்ராய்டு 14 உடன் அனுப்படலாம். ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆனது ஆண்ட்ராய்டு 13 உடன் அனுப்பப்பட்டது; இப்போது ஆண்ட்ராய்டு 14 க்கு மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

என்ன விலைக்கு வரும்? ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி அன்று நடக்கும் வெளியீட்டின் போது தான் அறிவிக்கப்படும். இருப்பினும் இது நிச்சயம் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பனை விட விலை அதிகமாகவே இருக்கும்.

Special Edition-னா இப்படி இருக்கணும்.. OnePlus-ன் புதிய Apex மாடல்!

நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் ஓப்பன் தற்போது ரூ.1,39,999-க்கு வாங்க கிடைக்கிறது. ஆக இந்த ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் எப்படியும் ரூ.1,45,000 - ரூ.1,50.000 க்குள் என்கிற விலைக்குள் அறிமுகம் செய்யப்படலாம். அறிமுகமான வேகத்தில், அதாவது ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் விற்பனைக்கு வரும். இந்தியாவில் மட்டுமின்றி ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஆனது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஓப்பன் அம்சங்கள்: டூயல் சிம் (நானோ) ஆதரவுடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஆண்ட்ராய்டு 13 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ் அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 13.2 கொண்டு இயங்குகிறது. இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பனின் இன்னார் டிஸ்பிளேவாகும்.

வெளிப்புறத்தில் 10-120Hz டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட் மற்றும் 2,800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இந்த இரண்டு டிஸ்பிளேக்களுமே TÜV Rheinland Intelligent Eye Care சான்றிதழை பெற்றுள்ளன.

குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது 16GB LPDDR5x ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை 4 ஜிபி, 8 ஜிபி மற்றும் 12 ஜிபி அளவில் விர்ச்சுவல் ரேம் ஆக பயன்படுத்திக்கொள்ள முடியும்

கேமராக்களை பொறுத்தவரை, ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 1/1.43-இன்ச் சோனி LYT-T808 "பிக்சல் ஸ்டேக்டு" CMOS சென்சார் கொண்ட 48-மெகாபிக்சல் மெயின் கேமரா உள்ளது. இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (EIS), 85-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் ஒரு எப்/1.7 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பனில் 64-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவும் உள்ளது. அது ஓஐஎஸ், இஐஎஸ், 33.4-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.6 அபெர்க்ஷர் உடன் கூடிய OmniVision OV64B சென்சார் உள்ளது. இது 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம் மற்றும் 120x டிஜிட்டல் ஜூம் வரை ஆதரிக்கிறது.

மூன்றாவது கேமராவாக இது 48 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா உள்ளது; இது மேக்ரோ கேமராவாகவும் வேலை செய்யும். இது இஐஎஸ் உடனான சோனி IMX581 சென்சார், 114-டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடன் வருகிறது.

ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இன்னர் டிஸ்பிளேவில், இஐஎஸ் மற்றும் 91-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 20-மெகாபிக்சல் மெயின் கேமராவைப் பெறுவீர்கள். மேலும் இஐஎஸ், 88.5-டிகிரி ஃபீல்ட்-ஆஃப்-வியூ மற்றும் எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 32-மெகாபிக்சல் கேமராவும் உள்ளது. இது செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்கான கேமராக்களாக பயன்படும்.

512ஜிபி UFS 4.0 ஸ்டோரேஜுடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி LTE, வைஃபை 7, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யூஎஸ்பி 3.1 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் உள்ளன. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Open Apex Edition Crimson Shadow color to Launch in India on August 7
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X