கண்ணா.. 3வது லட்டு சாப்பிட ஆசையா.. OnePlus 13, OnePlus 13R உடன் 2025-ல் இன்னொரு ஒன்பிளஸ் மாடல்!
ஆப்பிளின் புதிய ஐபோன்கள், சாம்சங்கின் புதிய கேலக்ஸி எஸ் சீரீஸ் போன்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலில் ஒன்பிளஸின் பிளாக்ஷிப் நம்பர் சீரீஸும் சேர்ந்துவிட்டது. அப்படியான எதிர்பார்ப்பு தற்போது ஒன்பிளஸ் 13 (OnePlus 13) மீது உள்ளது.
சுவாரசியமாக ஒன்பிளஸ் 13 ஆனது வழக்கத்தை விட சற்றே முன்பாக அறிமுகம் ஆகிறது (சீனாவில் அறிமுகம் ஆனதை போலவே). இந்தியாவில் இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிகழ்வில் ஒன்பிளஸ் 13 உடன் சேர்த்து ஒன்பிளஸ் 13ஆர் (OnePlus 13R) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டு தொடங்கிய வேகத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2 முக்கிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவாது ஒன்பிளஸ் பிரியர்களுக்கு மத்தியில் மட்டுமின்றி, "புத்தாண்டில்.. புது போன் வாங்க வேண்டும்" என்கிற எண்ணம் கொண்டவர்களின் மத்தியிலும்ஆர்வத்தை தூண்டியுள்ளது. இதற்கிடையில் 2025 ஆம் ஆண்டில் இன்னொரு முக்கியமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.
அது ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) ஸ்மார்ட்போனாகும். பெயர் குறிப்பிடுவது போலவே இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாவது ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனாகும் (Foldable Smartphone); இது அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இது 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் வெளிவரவில்லை.
ஆனால் ஒரு சமீபத்திய லீக் தகவல் ஆனது ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போன் ஆனது ஒப்போ பைண்ட் என்5 (Oppo Find N5) ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) ஆக விரைவில் அறிமுகமாகும் என்கிறது. நினைவூட்டும் வண்ணம், ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் டாப்-ஆஃப்-லைன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் (Snapdragon 8 Elite Chipset) உடன் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில், ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனும் இதே சிப்செட் உடன் வரலாம். ஒருவேளை ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆனது 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்பட்டால், ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் ஆனது 2 மாதங்களுக்கு மட்டுமே பிளாக்ஷிப் சிப்செட் ஆக இருக்கும். ஏனென்றால் குவால்காம் வழக்கமாக அதன் புதிய ஸ்னாப்டிராகனை அக்டோபரில் அதன் வருடாந்திர உச்சிமாநாட்டில் (Qualcomm Annual Summit) அறிமுகப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி, இது முந்தைய மாடலை விட சற்றே பெரிய டிஸ்பிளேவை (Bigger Display) கொண்டிருக்கும். மேலும் இது 5700mAh பேட்டரியை பேக் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய மாடலில் உள்ள 4800mAh பேட்டரி உடன் ஒப்பிடும் போது, ஒரு நல்ல முன்னேற்றமாகும்.
இதுதவிர்த்து ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனுக்கான தனிப்பயனாக்கப்பட்ட யூஎஸ்பி போர்ட்டில் (Customized USB port) பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை (வழக்கம் போல) இது ஹசல்பிளாட்டால் (Hasselblad) ட்யூன் செய்யப்பட்ட ரியர் கேமராக்களுடன் வரலாம். அடுத்தடுத்த வாரங்களில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 மற்றும் ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போன்களை பற்றிய கூடுதல் தகவல்களை நாம் எதிர்பார்க்கலாம்; கிடைத்ததும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.1.5 லட்சத்திற்க்கு என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இது ரூ.1,39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓப்பன் 2-வின் முக்கிய அம்சங்கள் வெளிப்படுத்தப்பட்ட பின்னரே, இந்த விலை குறையுமே அல்லது இன்னும் அதிகமாகுமா என்பதை நாம் "கணக்கிட" முடியும்.


Click it and Unblock the Notifications








