அட OnePlus 13 கிடக்குது.. OnePlus Open 2 அறிமுக தேதிய சொல்லிட்டாங்க.. எப்போ? என்ன விலை? என்ன அம்சங்கள்?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் கடந்த 2023 ஆம் ஆண்டில் அதன் முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் ஒப்பனை (OnePlus Open) அறிமுகம் செய்து, போல்டபிள் ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இது அனைத்து நிறுவனங்களையுமே போல்டபிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் குதிக்க தூண்டியது. முதல் மாதலி அறிமுகம் செய்து ஒரு வருடம் கழித்தும் கூட, போல்டபிள் ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்பிலா நிறுவனம் ஒரு வலுவான போட்டியாளராக உள்ளது. தற்போது இந்நிறுவனம் இன்னும் வலுவாக திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.
ஏனென்றால், ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) என பெயரிடப்பட்ட நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒன்பிளஸ் ஒப்பன் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இந்த ஸ்மார்ட்போனின் சாத்தியமான விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இதோ விவரங்கள்:

எக்ஸ் தளத்தில் @Rodent950 என்கிற பெயரை கொண்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போன் ஆனது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த லான்ச் டைம்லைன் ஆனது ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் வெளியீட்டுடன் ஒத்துப்போகிறது. அறியாதோர்களுக்கு - இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் போல்டபிள் சீரிஸின் சீனப் பதிப்பாகும்.
அதாவது ஒரிஜினல் ஒப்போ ஃபைண்ட் என்3 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் ஓப்பன் ஆக உலகளவில் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே, இப்போது ஒப்போ ஃபைண்ட் என்5 வருவதால், அது ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆக உலகளவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த லான்ச் டைம்லைன் உண்மையாக இருந்தால், ஒப்போ ஃபைண்ட் என்5 மற்றும் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஆகிய இரண்டுமே 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரே நேரத்தில் அறிமுகமாகலாம்.
லான்ச் டைம்லைனை லீக் செய்த டிப்ஸ்டர் ஒன்பிளஸ் ஒப்பன் ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் கொண்டுவரப்படவுள்ள சாத்தியமான மாற்றங்கள் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொண்டார். முன்னதாக ஒப்போ ஃபைண்ட் என்5 ஸ்மார்ட்போன் ஆனது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்8 அல்ட்ராவிலுள்ள குவாட்-கேமரா செட்டப்பை "கடன் வாங்கும்" என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது இதில் ட்ரிபிள்-ரியர் கேமரா செட்டப் தான் இடம்பெறும் என்பது போல் தெரிகிறது.
பெரிய குவாட்-கேமரா செட்டப்பை தவிர்ப்பதற்கான முடிவானது, ஸ்மார்ட்போனை மேலும் பெரிதாக்க வேண்டாம் என்கிற கவலையின் காரணமாக இருக்கலாம். ஏனெனில் கூடுதல் கேமராக்களை சேர்ப்பது ஸ்மார்ட்போனின் அளவு மற்றும் எடையை அதிகரிக்கக்கூடும். ஆக ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனிலும் நாம் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பார்க்கலாம். நினைவூட்டும் வண்ணம் ஒரிஜினல் ஒன்பிளஸ் ஓப்பன் மாடலில் 64-மெகாபிக்சல் 3எக்ஸ் பெரிஸ்கோப் கேமரா உட்பட ஈர்க்கக்கூடிய கேமரா செட்டப் உள்ளது. இந்தியாவில் ஒன்பிளஸ் ஓப்பன் 2 ரூ.1,39,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் ஓப்பன் 2 VS ஒன்பிளஸ் 13 - இதில் எந்த ஸ்மார்ட்போன் முதலில் அறிமுகமாகும்? ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதமே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒண்பொளிஸ் பிராண்டின் வெளியீட்டு அட்டவணையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
சில மணி நேரங்களுக்கு முன்பாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவில் 2 "நுணுக்கமான" மற்றும் "முக்கியமான" அம்சங்கள் இடம்பெறலாம் என்கிற தகவல் வெளியானது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்த தகவலின்படி ஒன்பிளஸ் 13 ஆனது 2கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான BOE X2 "ஓரியண்டல்" டிஸ்பிளேவை பெறும் என்றும், அத ஒரு "சூப்பர் செராமிக் கிளாஸ்" அமைப்பை கொண்டிருக்கும் 8T LTPO பேனல் ஆக இருக்கும் என்றும் பரிந்துரைக்கிறது
மேலும் ஒன்பிளஸ் 13 ஆனது அதன் டிஸ்பிளேவிற்குள் அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை உட்பொதிக்ககலாம் என்றும், இது சூப்பர் ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் சாஃப்ட் எட்ஜ் ஃபோர்-லெவல் டெப்த் போன்ற அம்சங்களை ஆதரிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications