ஒரேயொரு ட்வீட்டை போட்டு ஓவர் நைட்டில் Apple-ன் மானத்தை வாங்கிய OPPO பிரசிடெண்ட்!
புதுசா ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்றீங்கன்னா.. செஞ்சிட்டு போக வேண்டியது தானே.. எங்களை ஏன் சார் நோண்டுறீங்க.. என்று ஆப்பிள் கேட்கும்படியான ஒரு வேலையே பார்த்துள்ளது ஒப்போ நிறுவனம். அதென்ன வேலை? அப்படி என்ன ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது? அது என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? இதோ விவரங்கள்:
ஒப்போ நிறுவனமானது ஒப்போ பைண்ட் என்5 (Oppo Find N5) என்று அழைக்கப்படும் அதன் புதிய போல்டபிள் ஸ்மார்ட்போனை (Foldable Smartphone) அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியா உட்பட உலக சந்தைகளில் இது ஒன்பிளஸ் ஓப்பன் 2 (OnePlus Open 2) போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஒப்போ நிறுவனம் அதன் பைண்ட் என்5 ஸ்மார்ட்போனை ஆப்பிளின் ஐபேட் ப்ரோ 4எம் (Apple iPad Pro M4) உடன் ஒப்பிட்டு, இது எவ்வளவு ஸ்லிம் ஆக இருக்கிறது என்பதை டீஸ் செய்துள்ளது. ஒப்போ நிறுவனத்தின் வெளிநாட்டு சந்தைப்படுத்தல், விற்பனை மற்றும் சேவைகளின் தலைவர் ஆன பில்லி ஜாங், எக்ஸ் பக்கம் வழியிலான ஒரு பதிவில், வரவிருக்கும் ஒப்போ பைண்ட் என்5 ஸ்மார்ட்போன் ஆனது, இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டதிலேயே மிகவும் மெலிதான ஆப்பிள் டிவைஸ் உடன் ஒப்பிட்டுளார்; அது எம்4 சிப் கொண்டு இயங்கும் ஐபேட் ப்ரோ மாடலாகும்.
நினைவூட்டும் வண்ணம், ஐபேட் ப்ரோ எம்4 மாடல் ஆனது 5.1மிமீ தடிமன் கொண்டதாக இருக்கிறது. ஆக வரவிருக்கும் ஒப்போ பைண்ட் என்5 / ஒன்பிளஸ் ஓப்பன் 2 மாடல் ஆனது அன்போல்ட் செய்யும் போது 4மிமீ தடிமனை கொண்டதா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், ஹானர் மேஜிக் வி3 மாடலை பின்னுக்கு தள்ளி ஒப்போ பைண்ட் என்5 ஆனது - உலகின் மிக மெலிதான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனாக மாறும். நினைவூட்டும் வண்ணம் ஹானர் மேஜிக் வி3 4.35 மிமீ தடிமனை கொண்டுள்ளது.
ஒப்போ பைண்ட் என்5 / ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது 50W வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் வரும் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஒப்போ பைண்ட் என்5 / ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 2கே ரெசல்யூஷன் உடனான 6.85-இன்ச் LTPO டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம். கேமராக்களை பொறுத்தவரை ஹாசல்பிளாட் தொழில்நுட்பத்துடன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை (Triple rear camera setup with Hasselblad technology) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஒப்பன் ஸ்மார்ட்போனில் கிடைக்கும் 4,805mAh பேட்டரியுடன் ஒப்பிடும்போது, புதிய மாடல் ஆனது பெரிய 5,900mAh பேட்டரியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இது நீர் எதிர்ப்பிற்கான ஐபிஎக்ஸ்9 ரேட்டிங்கை பெறவும் வாய்ப்புள்ளது. விலையை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஓப்பன் 2 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.1,39,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் கடந்த 2023 இல் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் இந்திய விலையும் கூட ரூ.1.39,999 தான். இது சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டது. இது எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வெளியானது.
ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 1-120Hz டைனமிக் ரெப்ரெஷ் ரேட், 2268 x 2440 பிக்சல்ஸ் உடனான 7.82-இன்ச் 2கே Flexi-fluid LTPO 3.0 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஒன்பிளஸ் ஓப்பனின் இன்னார் டிஸ்பிளேவாகும்.கூடவே 6.31-இன்ச் (1116 x 2484 பிக்சல்ஸ்) 2கே LTPO 3.0 சூப்பர் ஃப்ளூயிட் AMOLED அவுட்டர் டிஸ்பிளேவையும் கொண்டுள்ளது
குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப் உடன் வரும் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போனில் ஹசல்பிளாட் பிராண்டட் ட்ரிபிள் கேமரா செட்டப் உள்ளது. கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் டூயல்-செல் 4,800mAh பேட்டரியை (3295 + 1510mAh) கொண்டுள்ளது. இது 67W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இதன் ரீடெயில் பாக்ஸில் 80W சார்ஜருடன் இடம்பெறும். Photo Courtesy: Billy Zhang / X page


Click it and Unblock the Notifications








