ஒன் ப்ளஸ் ஒன் 64 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.21,999 ரூபாய்க்கு வெளியானது

Posted By:

இந்தியாவில் ஒன் ப்ளஸ் 64ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.21,999க்கு வெளியானது. ஒப்போ நிறுவனத்தின் முன்னாள் துணை தலைவர் பீட் லாவ் மூலம் ஒன் ப்ளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. ஒன் ப்ள்ஸ் ஒன், 5.5 இன்ச் 1080 புல் எஹ்டி டிஸ்ப்ளே கொண்டு இந்தியாவில் அமேசான் தளத்தில் மட்டும் தான் கிடைக்கின்றது.

ஒன் ப்ளஸ் ஒன் 64 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.21,999 தாங்க

இதை வாங்க வாடிக்கையாளர்களுக்கு ஒன் ப்ளஸ் ஒன் இன்வைட் வேண்டும், இன்வைட்களை பெற ஒன் ப்ளஸ் நியுஸ் லெட்டருக்கு சப் ஸ்கிரைப் செய்ய வேண்டும். ஏற்கனவே அமேசான் தளத்தில் ஒன் ப்ளஸ் வாங்கியவர்களும் அவர்களது நண்பர்களுக்கு இன்வைட் அனுப்பலாம்.

டிசெம்பர் ஸ்பெஷல், டாப் 10 ஸ்மார்ட்போன் பட்டியல்

இன்வைட் பெற்றதும் ஒன் ப்ளஸ் அக்கவுன்ட்டில் ரெஜிஸ்டர் செய்து போனை வாங்கி கொள்ளலாம்.

ஒன் ப்ளஸ் ஒன் 64 ஜிபி ஸ்மார்ட்போன் ரூ.21,999 தாங்க

ஒன் ப்ளஸ் ஒன் டூயல் எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 13 மெகா பிக்சல் ப்ரைமரி கேமராவும் 5 மெகாபிக்சல் முன்பக்க கேமரா கொண்டு ஆன்டிராய்டு 4.4 மூலம் இயங்குகின்றது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 பிராசஸர் மற்றும் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் சிபியு 3 ஜிபி ராம் கொண்டுள்ளது.

English summary
OnePlus One (64GB) launched in India at Rs 21,999. OnePlus, has launched its OnePlus One smartphone (64GB) in India at a price of Rs 21,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்