8ஜிபி + 256ஜிபி மாடல் உறுதி; ஒன்ப்ளஸ் 6-ன் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியானது!
வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ டீஸரில் காணப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, மிக உயர்ந்த மெமரி கட்டமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்களை வெளிபடுத்தியுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்ப்ளஸ் 6 ஸ்மார்ட்போனின் அதிகாரபூர்வ அம்சங்கள் வெளியாகியுள்ளன. வெளியாகியுள்ள ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ டீஸரில் காணப்படும் ஒன்ப்ளஸ் 6 ஆனது, மிக உயர்ந்த மெமரி கட்டமைப்பு மற்றும் சில முக்கிய அம்சங்களை வெளிபடுத்தியுள்ளது.

ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆன பீட் லியூ வெளியிட்ட இந்த புதிய டீஸரில், "ஒன்ப்ளஸ் 6 தயார்" மற்றும் "உங்களுக்கு தேவையான வேகம்" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போன் மிகவும் சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி கொண்டு இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலைப்பாட்டில், சமீபத்தில், ஒன்ப்ளஸ் 6-ன் டிப்ஸ்பிளே ஆனது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ்-ல் இருப்பது போன்றதொரு முன்பக்க வடிவமைப்பை கொண்டிருக்கும் என்கிற தகவலும் உறுதியானது.
பின்புறத்தில், ஒரு செங்குத்து வடிவமைப்பிலான டூயல் கேமரா அமைப்பு மற்றும் ஒரு கைரேகை ரீடர் ஆகியவைகளை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நம்பமுடியாத 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு வெளியாகவுள்ளது. ஒன்ப்ளஸ் 6-ன் ஹைஎண்ட் மாடல் ஆனது சுமார் 697 அமெரிக்க டாலர்கள் என்கிற விலை நிர்ணயத்தை பெறலாம். அதாவது, தோராயமாக ரூ.45,400/- என்கிற விலைக்கு அறிமுகமாகலாம்.
ஆகமொத்தம் ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசி, 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு என ஒரு முரட்டுத்தனமான ஸ்மார்ட்போனாக ஒன்ப்ளஸ் 6 களமிறங்கும் என்பது மட்டும் உறுதி. ஒன்ப்ளஸ் 6-ன் 128 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பு மாடல் ஆனது முறையே 525 அமெரிக்க டாலர்கள் (அதாவது ரூ.34,100/-) மற்றும் 602 அமெரிக்க டாலர்கள் (அதாவது ரூ.39,100/-) என்கிற புள்ளியில் வெளியாகலாம்.
ஒன்ப்ளஸ் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் மூன்று சேமிப்பு மறுபாடுகளில் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் - ஒன்ப்ளஸ் 6 தான் என்பது குறிப்பிடத் தக்கது.!


Click it and Unblock the Notifications