ஏப்ரல் மாதம் அறிமுகம்.. 6200mAh பேட்டரி, Snapdragon 8 Elite சிப் உடன் OnePlus 13T.. எப்போது? என்ன விலை?
ஒன்பிளஸ் (OnePlus) ரசிகர்களுக்கு ஒரு பேட் நியூஸ். கூடவே ஒரு குட் நியூஸ். பேட் நியூஸ் என்னவென்றால்.. கடந்த பல வாரங்களாக, பல வகையான லீக்களில் சிக்கி, நம்முடைய ஆர்வத்தை கிளப்பி விட்ட ஒன்பிளஸ் 13 மினி (OnePlus 13 Mini) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாது.
மாறாக அது ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படும். குட் நியூஸ் என்னவென்றால், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளது. மேலும் இது இந்த 2025 ஏப்ரல் மாதமே அறிமுகம் செய்யப்படும் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளது.

ஒன்பிளஸ் 13டி எப்போது அறிமுகமாகும் (OnePlus 13T Launch)? ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது இந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து நிச்சயம்இந்திய அறிமுகமும் நடக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் . ஏனென்றால் இந்திய சந்தையில் ஒன்பிளஸ் டி சீரீஸ் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுளன
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது பிரீமியம் டிசைன் மற்றும் சக்திவாய்ந்த இன்டர்னல்களின் கலவையுடன் கூடிய ஒரு சிறிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும். அறியாதோர்க்கு இது சிறிய அளவிலான டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம் என்பதால் தான் ஒன்பிளஸ் 13 மினி என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இது ஒன்பிளஸ் 13டி என்கிற பெயரில் தான் வெளியாகும்; ஆனால் சிறிய அளவிலான டிஸ்பிளேவைத்தான் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் "ஸ்மால் ஸ்க்ரீன் பவர்ஹவுஸ்" என்கிற டேக்லைனுடன் இந்த ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்துகிறது, இது ஹை பெர்பார்மென்ஸ் மற்றும் போர்ட்பிலிட்டியை சமநிலைப்படுத்தும் ஒரு ஸ்மார்ட்போனாக இருக்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் முழு அம்சங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், நம்பகமான ஆதாரங்களில் இருந்து வெளியான தகவல்களை வைத்து ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் சில முக்கிய அம்சங்களை யூகிக்க முடியும்,
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் (OnePlus 13T Expected Specifications and Price)? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்த புகைப்படங்கள் வழியாக, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் ஒப்போ 13 சீரீஸில் (Oppo 13 Series) இருப்பதை போன்ற ரியர் டிசைனை காட்டுகிறது.
இரண்டுமே ஒரு சதுர வடிவிலான கேமரா யூனிட்டை (Square camera unit) காட்டுகின்றன. அதில் செங்குத்தாக நிலைநிறுத்தப்பட்ட 2 கேமராக்கள் உள்ளன. அதனுடன் ஒரு எல்இடி ஃபிளாஷ் மற்றும் ஒரு சென்சாரும் உள்ளது. மேலும் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் டூயல் ரியர் கேமரா செட்டப்பில் (Dual Rear Camera Setup) 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஒரு லேட்டஸ்ட் லீக் தகவலின்படி, ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 6200mAh பேட்டரியை பேக் செய்யும். இது ஒன்பிளஸ் 13 மாடலில் இருப்பதை விட பெரிய பேட்டரி ஆகும். ஒன்பிளஸ் 13 மாடலில் 6000mAh பேட்டரி மட்டுமே உள்ளது. மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஊடான 6.3 ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும் உட்பொதிக்கப்பட்ட ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Optical Fingerprint Sensor) உடன் வரலாம். ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் விலையை பொறுத்தவரை இது சீனாவில், இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். Photo Courtesy: Digital Chat Station


Click it and Unblock the Notifications








