Home
Mobile

ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தை வாங்க வெயிட் பண்றீங்களா? இதோ உங்களுக்கு ஒரு மகிழ்சியான செய்தி.!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி சாதனத்தை சற்று குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் சிறந்த மென்பொருள், கேமரா ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளதால் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் அடுத்த விற்பனையானது வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெறும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 Fluid AMOLED டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

 சக்திவாய்ந்த குவால்காம்

இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4115எம்ஏஎச்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4115எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ற்போது இரண்டு ஸ்டோரேஜ்

ஒன்பிளஸ் நோர்ட் தற்போது இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 27,999 ஆகும். அதேசமயம் 12 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 29,999 ஆகும். ஒன்பிளஸ் நோர்ட் போனின், 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் செப்டம்பர் தொடக்கத்தில் ரூ. 24,999 என்ற விலையில் விற்பனையாகும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Smartphone Next Sale Date Announced In India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X