ஒன்பிளஸ் நோர்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: அட்டகாச அப்டேட்!

|

ஒன்பிளஸ் நோர்ட் இந்தியாவில் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் உடனான ஆக்ஸிஜன் ஓஎஸ் புதுப்பிப்பை பெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் பெற்றிருக்கும் அப்டேட் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

முதன்மை ரக ஸ்மரார்ட்போன்கள்

முதன்மைரக ஸ்மார்ட்போன்கள் வாங்க திட்டமிட்டு இருப்பவர்களுக்கு ஒன்பிளஸ் சிறந்த தேர்வாக இருக்கிறது. காரணம் விலைக்கேற்ற அம்சங்களோடு தொடர்ந்து முதன்மை ரக அம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு என தனிப்பட வாடிக்கையாளர்கள் பெரிதளவு இருக்கின்றனர்.

ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு

ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு

ஒன்பிளஸ் நிறுவனம் முன்னதாக ஒன்பிளஸ் நோர்டுக்கான ஆக்ஸிஜன் ஓஎஸ்11 ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு பிழைகள் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் இதன் உருவாக்கம் பின்வாங்கப்பட்டது. புதுப்பித்தல் காரணமாக பிழைகள் நிறுவனத்தால் இடைநிறுத்தப்பட்டது. இந்த புதுப்பிப்பானது ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.1.1 என மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த சாதனங்கள் புதுப்பிப்பு ஆதரவை பெற்று இருக்கிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி இந்தியாவை பொறுத்தவரை ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.1.2.AC01DA எனவும் உலக சந்தையில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.1.2.AC01AA எனவும் இருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பல்வேறு ஆதரவுகள் அப்டேட்

மேலும் ஒன்பிளஸ் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11 உடன் ஆண்ட்ராய்ட் 11 புதுப்பிப்பு ஆனது கணினி மின் நுகர்வு செயல்திறன், டார்க் மோட் பயன்முறை, தனியுரிமைக் கொள்கை ஆகியவைகளின் சிக்கலை மேம்படுத்தல் மூலம் சரிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு சிக்கல்களை இந்த அப்டேட் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதுப்பிப்பு கால்குலேட்டர் உடனான சிக்கல்களை சரிசெய்கிறது.

எப்படி அப்டேட் செய்வது

புதுப்பிப்பு அறிவிப்பை சரிபார்க்க, செட்டிங்க்ஸ் (அமைப்புகள்) சென்று அதில் சிஸ்டம் தேர்வை கிளிக் செய்து அப்டேட் புதுப்பிப்பை பார்த்து புதுப்பிப்பு செய்து கொள்ளலாம். அதேபோல் பயனர்கள் பேட்டரிநிலை 30 சதவீதத்திற்கு அதிகமாகவும், குறைந்தபட்ச 3 ஜிபி சேமிப்பிடம் கிடைக்கக்கூடிய அம்சமாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என ஒன்பிளஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பம்சங்களோடு ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த அளவு முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பு, சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். கண்டிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே பெரிய அளவில் இருப்பதால் ஆன்லைன் கேமிங், திரைப்படங்கள் போன்ற அனைத்து வசதிக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

Best Mobiles in India

English summary
Oneplus Nord Smartphone Getting Update in India: Android Security Oxygen OS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X