ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!

|

ஒன்பிளஸ் நோர்ட் இந்தியாவில் எம்எஸ்ஒய் 2021 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் உடனான ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.13 புதிப்பிப்பை பெறுகிறது. ஒன்பிளஸ் இந்தியாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.1.3.ஏசி01டிஏ சாஃப்ட்வேர் புதுப்பிப்பை வெளியிடுகிறது.

ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!

ஒன்பிளஸ் இந்தியாவில் தனது ஒன்பிளஸ் நோர்டுக்கு புதிய ஆக்ஸிஜன் ஓஎஸ் புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. புதுப்பிப்பு மே 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு ஆன கேமரா, சிஸ்டம் மற்றும் ஃபைல் மேனேஜர் மே 2021 பாதுகாப்பு புதுப்பிப்பை பெற்றுள்ளது. இதுகுறித்து ஃபோரம்ஸ் அறிக்கையின்படி, ஒன்பிளஸ் இந்தியாவில் பதிப்பு ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.1.3.ஏசி01டிஏ., ஐரோப்பாவில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.1.3.ஏசி01பிஏ மற்றும் உலக சந்தைகளில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 11.1.1.3.ஏசி01ஏஏ ஆகியவற்றுடன் சாஃப்ட்வேர் புதுப்பிப்பை பெறுகிறது.

இந்த புதுப்பிப்பு பெறுவதற்கு ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் (அமைப்புகள்) > கணினி> கணினி புதுப்பிப்புக்குள் செல்ல வேண்டும். இதற்குள் சென்றவுடன் புதுப்பிப்பு அப்டேட் கிடைக்கும். இது பயனர்களின் பேட்டரி அளவை 30 சதவீதத்திற்கு மேலாகவும், குறைந்தபட்சம் 3 ஜிபி சேமிப்பிடத்தையும் நிரப்புகிறது.

ஒன்பிளஸ் நோர்டுக்கான சமீபத்திய கணினி புதுப்பிப்பு, வைஃபை இணைப்பின் வேகத்தின் மேம்படுத்துகிறது. மேலும் தவறவிட்ட அழைப்புகளை சரிசெய்கிறது, அழைப்பு பதிவுகள் மற்றும் நிலையான அறியப்பட்ட சிக்கல்களை மேம்படுத்துகிறது இந்த அப்டேட்.

ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். கண்டிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே பெரிய அளவில் இருப்பதால் ஆன்லைன் கேமிங், திரைப்படங்கள் போன்ற அனைத்து வசதிக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஒரளவு கேமிங் திறன் கொண்டு வெளிவந்துள்ளது, இதுவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் இருந்தால் கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாக செயல்படும்.

ஒன்பிளஸ் இந்த ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneplus Nord Smartphone Gets Oxygen OS 11.1.1.3 Update in India With Android Security Patch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X