Home
Mobile

இன்று மதியம் விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்.! ரூ.1000 சலுகை.!

மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது இன்று மதியம் 2மணிக்கு அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒன்பிளஸ் நோர்ட்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.27,999-ஆக உள்ளது. மேலும் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,999-ஆக உள்ளது. மேலும் விற்பனை சலுகையை பொறுத்தவரை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வழியாக பணம் செலுத்துபவர்களுக்கு அமேசான் இந்தியா கூடுதலாக
ரூ.1,000 என்கிற தள்ளுபடியை அளிக்கிறது. குறிப்பாக கிரெடிட் கார்டுஃடெபிட் கார்டு வழியிலான இஎம்ஐ-க்கள் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கும் இந்த அட்டகாச சலுகை பொருந்தும்.

நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம்

இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஜிபி/8ஜிபி ரேம்

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/128ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்றஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும்
மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ்,

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Sale Starts Today In India Price Offers And mMore: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X