Just In
- 41 min ago
மிரட்டலான Oppo Reno 5 Pro 5G போனின் விற்பனை இன்று துவக்கம்.. விலை என்ன தெரியுமா?
- 1 hr ago
குடியரசு தினத்தன்று தயாராக இருங்கள்-4 மில்லியன் முன்பதிவுகளை கடந்த FAU-G விளையாட்டு: முன்பதிவு செய்வது எப்படி?
- 1 hr ago
1 மில்லியன் Poco C3 யூனிட்டுகள் விற்று தீர்ந்தது.. குறுகிய கால சலுகை விலை ரூ. 6,999 மட்டுமே..உடனே முந்துங்கள்.
- 1 hr ago
ஏர்டெல் நிறுவனத்தின் Safe Pay அறிமுகம்: பணம் அனுப்ப சரியான வழி.!
Don't Miss
- Movies
பாலாவின் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல இளம் நடிகர்!
- Lifestyle
இதயத்துல அடைப்பு இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...
- News
டிரம்பின் பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கம்.. இனி பேஸ்புக்கின் உச்ச நீதிமன்றம் கையில்..! பரபரப்பு
- Sports
5 விக்கெட் எடுத்ததும் ஓடிப் போய் பும்ராவை கட்டிப் பிடிச்சுக்கிட்டேன்... சந்தோஷம் தாங்கல!
- Finance
ஏமாற்றம் தந்த சென்செக்ஸ்.. 49,300க்கு அருகில் வர்த்தகம்.. என்ன காரணம்..!
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்ததா ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன்.! விமர்சனம்.!
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் சமீபத்திய நாட்களாக ஸ்மார்ட்போன் ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் விலைக்கேற்ப பல சுவாரஸ்மான அம்சங்களும் வடிவமைப்பும் உள்ளன. ஒன்பிளஸ் நோர்ட் தனித்துவமாகவும் புதுமையான அமைப்போடும் அறிமுகம் செய்யப்பட்டது.

AR வெளியீட்டு நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். ஆரம்பம் முதலே ஒன்பிளஸ் நோர்ட் தனித்துவத்தை காட்டியது. அதோடு பார்வையாளர்களின் தொடர்புகளை மேம்படுத்த தனித்துவமான ஆன்லைன் பாப் நிகழ்வு ஒன்றையும் நிறுவனம் நடத்தியது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். கண்டிப்பாக இந்த சாதனத்தின் டிஸ்பிளே பெரிய அளவில் இருப்பதால் ஆன்லைன் கேமிங், திரைப்படங்கள் போன்ற அனைத்து வசதிக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.
அண்டார்டிகா பற்றி நீங்கள் அறிந்திராத 24 பகிரங்கமான உண்மைகள்.! Part - 2

ஒரளவு கேமிங் திறன் கொண்டு வெளிவந்துள்ளது
இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது.மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஒரளவு கேமிங் திறன் கொண்டு வெளிவந்துள்ளது, இதுவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் இருந்தால் கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாக செயல்படும்.

துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்
ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு 5000எம்ஏஎச் பேட்டரி கொடுத்திருந்தால் பரவயில்லை, ஆனால் 4000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளதால் ஒரு நாள் மட்டுமே பேட்டரி தாங்கும் என்பது தான் உண்மை. இருந்தபோதிலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பது மிக மிக சிறப்பு.

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 27,999 ஆகும். அதேசமயம் 12 ஜிபி + 256 ஜிபி சேமிப்பு மாடலின் விலை ரூ. 29,999 ஆகும். ஒன்பிளஸ் நோர்ட் போனின், 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் செப்டம்பர் தொடக்கத்தில் ரூ. 24,999 என்ற விலையில் விற்பனையாகும் என்று ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190