Home
Mobile

ஒன்பிளஸ் நோர்ட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு OxygenOS 11.1.1.3 அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தின் கேமரா, நெட்வொர்க், file manager போன்றவற்றின் மேம்பாடுகளுக்கு இந்த புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு May 2021 Android security patch வசதியும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் நோர்ட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம்செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ஒன்பிளஸ் நோர்ட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்குமிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்றஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.! என்ன தெரியுமா?

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Received OxygenOS 11.1.1.3 update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X