ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு துவக்கம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் முன்பதிவு இன்று மதியம் சரியாக 1.30மணி அளவில் துவங்குகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பற்றிய பல விவரங்கள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்போனின்
மீது நிறைய ஹைப் உருவாகியுள்ளது, ஏனெனில் புதிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது மற்ற சாதனங்களை விட அதிநவீனதொழில்நுட்ப வசதியுடன் களமிறங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ர்ட் ஸ்மார்ட்போன் ஆனது வரும்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது வரும் ஜூலை 21 ஆம் தேதி ஏஆர் அறிமுக நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இன்றே இந்த ஸ்மார்ட்போனின முன்பதிவு துவங்கி விட்டது.

,வாடிக்கையாளர்கள் ரூ.5000

குறிப்பாக வரையறுக்கப்பட்ட ஆர்டர்களுக்கு அமேசான.இன் வழியாக ஒரு முறை மட்டுமே முன்பதிவுகள் திறக்கப்படும் என்று ஒன்பிளஸ்
கூறியுள்ளது,வாடிக்கையாளர்கள் ரூ.5000 செலுத்துவதன் மூலம் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் மாடலை முன்கூட்டியே ஆர்டர்
செய்யலாம்.

புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் ஃபிரட்ஜ் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!புதிய தொழில்நுட்ப வசதியுடன் சாம்சங் ஃபிரட்ஜ் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை

மேலும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை முன்கூட்டியே ஆர்டர் செய்வதன் மூலம் இரண்டு ஆச்சரியமான பரிசு பெட்டிகளை பெறுவதற்கான வழியை உருவாக்கும். பின்பு அவற்றில் ஒன்று வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே ஆர்டர் செய்த பின்னர் அனுப்பப்படும், மற்றொன்று ஆகஸ்ட் 31-ம் தேதி ஸ்மார்ட்போனை வாங்கிய பின்னர் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனத்தை முன்கூட்டியே

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தை முன்கூட்டியே ஆர்டர் செய்ய விரும்பும் பயனர்கள் அமேசான்.இன் தளத்தில் 1.30 மணிக்கு காத்திருக்கவும், ஆச்சரியமான பரிசு பெட்டிகளை பெற ரூ.499 செலுத்த வேண்டி இருக்கும். தற்போது பயனர்கள் இதற்கான பிரத்யேக அமேசான் பக்கத்தைப் பார்வையிட்டு, ஒன்பிளஸ் நோர்ட் ப்ரீ ஆர்டர்களைப் பற்றிய அப்டேட்களைப் பெற "Notify Me"பட்டனை என்பதைக் கிளிக் செய்தால் போதும்.

 ஒன்பிளஸ் நோர்ட் அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் அம்சங்கள்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டு வெளிவரும். பின்பு கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் இவற்றுள்ள அடக்கம்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின்

இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கில் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி

ஒன்பிளஸ் நோர்ட் சாதனத்தில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது.மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் இந்தஸமார்ட்போன் வெளிவரும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 4115எம்ஏச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு ரூ.40,000-விலையில் இந்தஒன்பிளஸ் நோர்ட் அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Pre-Orders Open Today at 1:30pm Via Amazon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X