Home
Mobile

தங்கத்த தூக்கிட்டு வாங்கடா.. இந்த OnePlus போன் மட்டும் வந்தா.. நீங்களே வாங்கிடுவீங்க.. எந்த மாடல்?

By கி.ஹரிஹரசுதன்

இந்தியாவில் ஆப்பிள், சாம்சங் போன்களுக்கு அடுத்தப்படியாக ஒன்பிளஸ் (OnePlus) போன்களுக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த போன்களின் கேமரா மற்றும் டிசைன் அந்த லெவலில் இருக்கும். இருப்பினும், விலை சற்று அதிகமாக இருப்பதால், காத்திருந்து வாங்க வேண்டியிருக்கிறது.

ஆனால், இப்போது வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி போனின் விலை உங்களையே வாங்க வைத்துவிடும். அதன் அம்சங்களை மட்டும் சும்மானு சொல்லிவிட முடியாது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி போனின் அம்சங்கள் குறித்த முழு தகவல்களும் கீக்பெஞ்ச் (Geekbench) வெப்சைட்டில் வெளியாகியிருக்கிறது. சாம்சங் சென்சாருடன் கூடிய 108 எம்பி + 2 எம்பி + 2 எம்பி மெயின் கேமரா செட்டப், ஸ்னாப்டிராகன் 695 சிப்செட், 5000 mAh பேட்டரி என அம்சங்களில் அசத்துகிறது.

இந்த OnePlus போன் மட்டும் வந்தா.. நீங்களே வாங்கிடுவீங்க! எந்த மாடல்?

இந்த போனின் விலையும் மிட்-ரேன்ஞ் போன்களைவிட குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் போனின் வெளியீட்டுக்கான காத்திருப்பு ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி போனின் கசிந்துள்ள முழு அம்சங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி போனின் லீக்கான அம்சங்கள்: இந்த போன் 6.72 இன்ச் (1080 X 2400 பிக்சல்ஸ்) ஃபுல்எச்டிபிளஸ் ஐபிஎஸ் எல்சிடி (FHD+ IPS LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. அதில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்ப்ளிங் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 680 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் இருக்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் புரொடெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

அட்ரினோ 619 ஜிபியு (Adreno 619 GPU) கிராபிக்ஸ் கார்ட் மற்றும் ஆண்ட்ராய்டு 13 உடன் ஸ்னாப்டிராகன் 695 ஆக்டாகோர் எஸ்ஓசி (Snapdragon 695 Octa-core SoC) சிப்செட் வருகிறது. அதோடு ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS) வருகிறது. 8 ஜிபி ரேம் 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் என்று இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி டிரிபிள் லேயர் மெயின் கேமரா செட்டப்பை கொண்டிருக்கிறது.

அதன்படி சாம்சங் எச்எம்6 பிரைமரி சென்சாருடன் (Samsung HM6 Primary Sensor) 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் சென்சார் + 2 எம்பி மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. 16 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 5,000mAh பேட்டரி 67W சூப்பர்வூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது. இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், ஒன்பிளஸ் நோர்ட் என்30 ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனின் ரீபிராண்ட் என்பதால் ரூ.20,000 விலையில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால், இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனின் விலை ரூ.19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போன் வரும் ஜூலை மாதம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord N30 5G Specifications Leaked on Geekbench with Snapdragon 695 and 8GB RAM Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X