பொசுக்குன்னு.. ரூ.20,000 பட்ஜெட்டில் அறிமுகமான புதிய OnePlus போன்.. அம்சங்களும் அல்டிமேட்-ஆ இருக்கு!
யாருமே எதிர்பாராத விலை நிர்ணயத்திற்கு ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி (OnePlus Nord N30 5G ) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி (OnePlus Nord N20 5G) போனின் அப்கிரேடட் வெர்ஷனாகும்.
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் (Qualcomm Snapdragon 695 Chipset) மூலம் இயக்கப்படும் புதிய ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி ஆனது 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இதுதவிர்த்து வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதன் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை? போன்ற விவரங்கள் இதோ:

ஒன்பிளஸ் நோர்ட் எஸ்30 5ஜி அம்சங்கள்: இது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்ட ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டை பயன்படுத்தி விரிவாக்கவும் முடியும்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை, 1080 x 2400 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட 6.72 இன்ச் எஃப்எச்டி+ டிஸ்பிளே உள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டிற்கான ஆதரவுடன் வருகிறது. ஒன்பிளஸ் நோர்ட் என்30 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) உடன் வருகிறது.
மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் கூட இது 108எம்பி மெயின் சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்புடன் வருகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 16எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 50W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் எஸ்30 5ஜி விலை மற்றும் விற்பனை: அமெரிக்காவில் இது 8ஜிபி ரேம் + 128ஜிபி என்கிற சிங்கிள் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பின்படி இது ரூ.24,800 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
க்ரோமேடிக் கிரே என்கிற சிங்கிள் கலர் ஆப்ஷனில் வரும் இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவானது ஒன்பிளஸ் அமெரிக்கா இணையதளம் வழியாக தொடங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை ப்ரீ-ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்கள் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2-வை மலிவு விலையில் வாங்கும் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் எஸ்30 5ஜி ஸ்மார்ட்போனின் ஷிப்பிங் (Shipping) ஆனது நாளை முதல், அதாவது ஜூன் 8 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனானது (OnePlus First Foldable Smartphone) அடுத்த மாதம் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








