Home
Mobile

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் என்200 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி ஸ்மார்ட்போன்
மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை.

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்காவில் உள்ள B&H Photo Video வலைத்தளத்தில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.17,600-ஆக உள்ளது. மேலும் இதன் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.49-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 20:9 என்ற திரைவிகிதம், 1080 x 2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு
வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.

16எம்பி செல்பீ கேமரா

16எம்பி செல்பீ கேமரா

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 480எஸ்ஒசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 480எஸ்ஒசி சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 480எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். இதுதவிர OxygenOS சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி மாடல்.

5ஜி, டூயல்-பேண்ட் ஜிபிஎஸ்

இரட்டை சிம் ஆதரவு, 5ஜி, டூயல்-பேண்ட் ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்200 5ஜி மாடல்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord N200 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X