பட்ஜெட் விலையில் ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
ஒன்பிளஸ் நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080x2400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்தபுதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன்.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6GB LPDDR4x ரேம் மற்றும் 128GB (UFS 2.1) மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மோனோகுரோம் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்தஅட்டகாசமான ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 33 வாட் பாஸ்ட் சார்ஜிங்
வசதி உள்ளது. மேலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய
ஸ்மார்ட்போன்.

5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ,வைபை, ப்ளூடூத் 5.1, யு.எஸ்.பி. டைப் சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போன. புளூ நிறத்தில் மட்டும் இந்த ஒன்பிளஸ் நோர்ட் என்20 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் விலை 282 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 21,500 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications