Home
Mobile

OnePlus Nord N10 பயனர்களுக்கு குட் நியூஸ்.. புதிய அப்டேட் ரெடி..

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் நோர்ட் N100 ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நோர்ட் N10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியது. ஒன்பிளஸ் நோர்ட் N100 சமீபத்தில் அதன் முதல் சாப்ட்வேர் அப்டேட்டை சமீபத்தில் பெற்றிருந்தாலும், இப்போது ஒன்பிளஸ் நோர்ட் N10 ஸ்மார்ட்போனின் முதல் ஆக்ஸிஜன் ஓஎஸ் அப்டேட்டை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் N10

ஒன்பிளஸ் நோர்ட் N10

ஒன்பிளஸ் ஃபோரம் அறிவித்தபடி, ஒன்பிளஸ் சாப்ட்வேர் அப்டேட் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.5.5 வெர்ஷன் உடன் ஐரோப்பாவில் ஒன்பிளஸ் நோர்ட் N10 ஸ்மார்ட்போனுக்கு வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் பவர் கன்சப்க்ஷன் மற்றும் கேமரா செயல்திறனை மேம்படுத்தும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்துடன் நவம்பர் மாத ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் உடன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

சிஸ்டம் அப்டேட் விபரம்

சிஸ்டம் அப்டேட் விபரம்

நோர்ட் N10 இல் ஆக்ஸிஜன் ஓஎஸ் 10.5.5 க்கான சேஞ்ச்லாக் விபரம்

சிஸ்டம் அப்டேட்
1. ஆப்டிமைஸ்ட் பவர் கன்சப்ஷன்
2. ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சை 2020.10

கேமரா அப்டேட்

கேமரா அப்டேட்

1. கேமராவின் படப்பிடிப்பு அனுபவத்தை நிறுவனம் மேம்படுத்தியுள்ளது.
எப்போதும் போல, OTA அம்சத்தை ஸ்மார்ட்போன் அதிகரிக்கும். OTA-வின் ஒரு சிறிய சதவீதம் சிறிய அளவு பயனர்களை முதலில் எட்டும், பிறகு சில நாட்களில் அனைத்து பயனர்களையும் எட்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் N10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

ஒன்பிளஸ் நோர்ட் N10 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்

ஒன்பிளஸ் நோர்ட் N10 ஸ்மார்ட்போன், 6.49' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் ஸ்னாப்டிராகன் 690 5 ஜி பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.5 இல் இயங்குகிறது. இந்த சாதனம், வார்ப் சார்ஜ் 30T ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை 4,300 எம்ஏஎச் பேட்டரி உடன் ஆதரிக்கிறது .

கேமரா

கேமரா

கேமராக்களைப் பொறுத்தவரை, குவாட் ரியர் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 119 டிகிரி அல்ட்ரா-வைட் லென்ஸுடன் கூடிய இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக இரண்டு சென்சார்களில் பிரத்யேக மேக்ரோ மற்றும் மோனோகிறோம் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா சென்சார் உள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord N10 User's receiving OxygenOS 10.5.5 update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X