ரூ.17,300 க்கு அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் தொடர் ஸ்மார்ட்போன்- அட்டகாச அம்சங்கள்!

|

ரூ.17,300-க்கு ஒன்பிளஸ் நோர்ட் என் 10 5 ஜி ஸ்மார்ட்போனும் ரூ.32,000-க்கு ஒன்பிளஸ் நோர்ட் என் 100 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகியுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் என்10 5 ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் என்100

ஒன்பிளஸ் நோர்ட் என்10 5 ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் என்100

ஒன்பிளஸ் இரண்டு புதிய இடைநிலை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்மார்ட்போன்கள் நோர்ட் தொடரின் வரிசையில் வெளியாகியுள்ளது. அவை ஒன்பிளஸ் நோர்ட் என்10 5 ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் என்100 ஸ்மார்ட்போன்களாகும். புதிய நோர்ட் தொடர் சாதனங்கள் இரண்டும் முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் நோர்டை விட குறைந்த விலையில் இருக்கின்றன.

பஞ்ச் ஹோஸ் டிஸ்ப்ளே

பஞ்ச் ஹோஸ் டிஸ்ப்ளே

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பஞ்ச் ஹோஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும். இந்த ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இல்லை. ஒன்பிளஸ் நோர்ட் என்10 5ஜி மிட்நைட் ஐஸ் வண்ணத்திலும், நோர்ட் என் 100 மிட்நைட் ஃபரோஸ்ட் வண்ண விருப்பத்திலும் கிடைக்கும்.

நோர்ட் N10 5G,நோர்ட் N100: விலை

நோர்ட் N10 5G,நோர்ட் N100: விலை

ஒன்பிளஸ் நோர்ட் N10 5G ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,000 ஆகும். ஒன்பிளஸ் நோர்ட் என் 100 இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 ஆகும். இரண்டு தொலைபேசிகளிலும் சிப்செட்டுகள் உட்பட பல வேறுபாடுகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் மட்டுமே கிடைக்கிறது.

வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!வெறும் ரூ.3,597-க்கு மூன்று கேமரா,18W சார்ஜிங் கொண்ட ஒப்போ ஏ33: பிளிப்கார்ட் தீபாவளி விற்பனை!

ஒன்பிளஸ் என் 10 5 ஜி: அம்சங்கள்

ஒன்பிளஸ் என் 10 5 ஜி: அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் என் 10 5 ஜி ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி சேமிப்புடன் வருகிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.49 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. என் 10 5G பின்புறத்தில் கைரேகை சென்சாருடன் வருகிறது.

64 மெகாபிக்சல் கேமரா

64 மெகாபிக்சல் கேமரா

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இருக்கிறது. 64 மெகாபிக்சல் கேமரா, 119 டிகிரி யூவி மேக்ரோ மற்றும் மோனோக்ரோம் லென்ஸ் கொண்ட குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. செல்பிக்களுக்கு 16 எம்.பி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதில் 4,300 mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் என் 100: அம்சங்கள்

ஒன்பிளஸ் நோர்ட் என் 100: அம்சங்கள்

நோர்ட் என் 100 ஸ்மார்ட்போன் ஒன்பிளஸின் மிகவும் மலிவு விலை சாதனமாகும். இந்த சாதனம் 6.52 இன்ச் டிஸ்ப்ளே 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த சாதனம் 4 ஜி ஆதரவுடன் ஸ்னாப்டிராகன் 460 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா

13 மெகாபிக்சல் முதன்மை கேமரா

13 மெகாபிக்சல் முதன்மை கேமராவுடன் வருகிறது. இதில் மேக்ரோ லென்ஸ் உட்பட இரண்டு லென்ஸ்கள் இருக்கிறது. இந்த சாதனத்தின் பின்புறத்தில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி 18W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

Best Mobiles in India

English summary
Oneplus Nord N10 5G, Oneplus Nord N100 Smartphone Launched With Punch Hole Display

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X