Home
Mobile

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.5.11 ஐப் பெறத் தொடங்கியுள்ளது. மேலும் இதனுடன் ஜனவரி 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பைக் கொண்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட்  ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11 ஐப் பெற உள்ளது. இந்த புதுப்பிப்பு தற்போது பீட்டா கட்டத்தில் உள்ளது. இந்த புதிய அப்டேட் ஆனது பயனர்களுக்கு விரைவில் படிப்படியாக கிடைக்கும் என ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 10.5.11 அப்டேட் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனுக்கு சிறந்த மேம்பாடுகளை கொடுக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 90Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் 180Hz திரை மாதிரி விகிதம் இடம்பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட்  ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

இந்த ஸ்மார்ட்போனில் சக்திவாய்ந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 620ஜிபியு வசதியும் உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஒரளவு கேமிங் திறன் கொண்டு வெளிவந்துள்ளது, இதுவே ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் இருந்தால் கேமிங் வசதிக்கு மிகவும் அருமையாக செயல்படும்.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி சோனி சென்சார்+8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி + 2எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் கொண்ட செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மற்ற ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள அதே கேமராக்கள் தான் இதிலும் இடம்பெற்றுள்ளது. மேலும் இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தி துல்லியமான புகைப்படங்களை எடுக்கமுடியும்.

ஒன்பிளஸ் நோர்ட்  ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

ஒன்பிளஸ் நோர்ட் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான டிஸ்பிளே மற்றும்
மென்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு
5000எம்ஏஎச் பேட்டரி கொடுத்திருந்தால் பரவயில்லை, ஆனால் 4000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளதால் ஒரு நாள் மட்டுமே பேட்டரி தாங்கும் என்பது தான் உண்மை. இருந்தபோதிலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பது மிக மிக சிறப்பு.

ஒன்பிளஸ் நோர்ட்  ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Get OxygenOS 10.5.11 Update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X